ஏன் சிறிய பெத்லகேம்? 58-1228 1. இந்தக் காலையில் என்னுடைய மேலங்கியை மேடையின் மேல் அணிந்திருப்பது ஒரு விதமான வேடிக்கையாகக் காணப்படலாம். ஆனால் நானோ சபையோர் எனக்கு அளித்த இந்த அழகான மேலங்கியை வெளிக்காட்ட மிகவும் மகிழ்ச்சியுடையவனாயிருந்தேன். அன்றொரு நாள் சகோதரன் நெவில் இங்கே ஒரு அருமையான சூட் அணிந்து வந்ததை நான் கண்டேன். அது அவருக்கு எவ்வளவு அருமையாய் பொருந்துகிறது என்று நான் எண்ணினேன். பாருங்கள், நான்—நான்…அது மிகவும் அருமையானதாய் காணப்பட்டது. சபையாரும் அதைக் குறித்து பேசிக் கொண்டனர். அப்பொழுது நான், “மேடையின் மீது நானும் என்னுடைய மேலங்கியை அணிந்து கொள்ளலாமே” என்று எண்ணினேன். நான் சற்று… 2 நாம் ஒருபோதும் வளரப்போவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் எப்பொழுதும்…நான் உயரமாய் வளரும்படி விரும்புகிறதில்லை. சகோதரன் லூதர், அதைக் குறித்து என்ன? இல்லை. நான் ஒருபோதும் வளர விரும்புகிறதில்லை. நாம் எப்பொழுதுமே சிறு பிள்ளைகளாகவே தரித்திருக்க விரும்புகிறோம். 3 [சகோதரன் நெவில், “சகோதரன் பிரான்ஹாம், நீர் உயரிய வகுப்பைச் சார்ந்த ஊழியக்காரர்கள் அணிந்து கொள்ளும் ஆடைகளைப் போன்ற ஒன்றை அணிந்துள்ளீர் என்று நான் எண்ணினேன். நான் அதை என்னுடைய ஓரக்கண்ணால் அப்படியே பார்த்து, நீர் ஒருவேளை ஒரு மேலாடையப் போன்ற ஒரு அங்கியை அணிந்துள்ளீர் என்று நினைத்துக் கொண்டேன்” என்றார். சகோதரன் பிரான்ஹாமும், சபையோரும் சிரிக்கின்றனர்.—ஆசி.] இந்த அருமையான மேலங்கிக்கு பாராட்டுதல். 4 நல்லது, இது உள்ளது—இது…என்று நான் கூறுவேன். எனக்கு இந்தவிதமான ஒன்று தேவையாயிருந்து கொண்டிருந்தது. எனவே இது நான் வைத்திருந்ததிலேய மிகச் சிறந்த ஒன்றாகும். ஆகவே நான் இதனை நிச்சயமாகவே பாராட்டுகிறேன். சகோதரன் ராய் ராபர்ஸன் இந்தக் காலையில் இங்கு இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நான் அறியேன். அவர் இதை தெரிந்தெடுக்கும்படியான ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது. எனவே இது உண்மையிலேயே ஒரு அருமையான தெரிந்தெடுத்தலாகும். ஆகையால் நாங்கள்—நாங்கள் இதை பெற்றுக்கொள்ள மிகவும் பிரியப்படுகிறோம். 5 நாங்கள் இந்தக் காலையில் அவருடைய விலையேறப்பெற்ற வார்த்தையில் எழுச்சியுற்று ஐக்கியங்கொள்ளும் இந்த அற்புதமான நேரங்களை அனுபவித்து மகிழும்படிக்கு ஜீவனுள்ள தேவனுடைய வீட்டிற்கு திரும்ப வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். 6 கர்த்தருக்குச் சித்தமானால், இப்பொழுது சீக்கிரத்தில் நான் கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். அடுத்த மாதம் நான் கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் செல்லப் கிறேன் என்பதை நீங்கள் வர்த்தக புருஷர்களினுடைய சத்தம் என்ற பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள் என்று நான் அனுமானிக்கிறேன். நாங்கள் எல்லா ஜனங்களுடைய ஜெபங்களின் ஆதரவையும் அணுகிக் கொண்டிருப்போம், ஏனென்றால் நாங்கள் தொலைவில் இருக்கையில் அவர்கள் எங்களுக்காக ஜெபிப்பார்கள். அதன் மூலமே கடல் கடந்து நடைபெறும் என்னுடைய கூட்டங்கள் சிறப்பாக நடைபெறும் என்று ஐயத்திற்கிடமின்றி அறியப்படுகிறது. அது அந்த காரணத்தினாலே அங்கே சிறப்பாக வெற்றியுமடைகிறது. அமெரிக்காவில்… 7 நான் கேட்டதை…நான் சகோதரன் மெர்சியரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் முதன் முதலாக எனக்கு ஒரு ஒலிப்பதிவுக் கருவியையும், என்னுடைய சில பிரசங்கங்களைக் கொண்டிருந்த ஒலித்தட்டுகளையும் கொடுத்தார். அப்பொழுது எவரேனும் என்னுடைய பிரசங்கத்தை கேட்டிருப்பார்களேயானால், அது அவர்களுக்கு தேவனுடைய கிருபையாய் இருந்திருக்கும் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஏனென்றால் நான் சற்று மேலான முறையில் பிரசங்கித்திருந்ததை நானே எண்ணிப்பார்த்தேன். 8 அவர் அதையுங்கூட ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்தார். ஒரு—ஒரு—ஒரு—சிறிய…உங்களால் அந்த பாகத்தை துண்டிக்க இயலும். பார்த்தீர்களா? இல்லையென்றால், அவர் அந்த நேரத்தில் ஒலிப்பதிவு கருவியின் பதிவுப் பொத்தானை அழுத்திக் கொண்டால் அதை பதிவிலிருந்து நீக்கிவிடலாம் என்று நான் யூகிக்கிறேன். 9 ஆனால் நான்—நான் உங்களுக்கு கூறுகிறதென்னவெனில் நான் அதைக் கேட்டபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அது நான் என் ஜீவியத்தில் எப்போதும் கேட்டதிலேயே எதிர்பார்த்ததைவிட குறைவான சாதாரண சொல்நயமற்ற பிரசங்கமாயிருந்தது. அது உண்மை, ஆனால் அது தொடர்ந்து பதிவு செய்யப்பட்டிருந்தது. நான்…அது எனக்கு மிகவும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினது. எனவே என்னால் என்னுடைய இரவு உணவையும்கூட சாப்பிட முடியாமற் போயிற்று. நான் சுகவீனமடைந்து, மேஜையை விட்டு எழும்பிச் சென்றேன். அந்த இரவு என்னால் தூங்கமுடியாமற்போயிற்று. 10 நேற்றையை தினம் சகோதரன் உட் அவர்களோடு கென்டக்கிக்குச் சென்றேன். அப்பொழுது நான் திரும்பி வருகையில், “சகோதரன் உட் அவர்களே, நான் பேசுவதைக் கேட்க எப்படி ஒரு நபர் வருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அது எதிர்ப்பார்ப்பதைக் காட்டிலும் மிகவும்—மிகவும் சொல்நயமற்றதாயும், திரும்ப திரும்ப நானே சிலவற்றை கூறுகிறதாயும் உள்ளதே. மேலும் ஓ, இலக்கணமோ தவறாயும், நிறுத்தற்குறிகள் போன்றவை சரியற்றதாகவும் உள்ளனவே” என்றேன். எனவே நான் வெறுமனே…எனக்குத் தெரியவில்லை. பின்னும் நான், “ஆனால் அது ஒருவிதத்தில், அது தேவனாயிருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளும்படி என்னை உற்சாகப்படுத்தினது. இல்லையென்றால் எவருமே வரமாட்டார்கள்” என்றேன். அது உண்மை. 11 ஆகையால் நான் சகோதரன் காலின்ஸ் அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இந்த கட்டிடத்திற்குள் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். எனவே அப்பொழுது நான் அவரிடத்தில் கூறினேன். அவர் வந்தபோது இதைக் குறித்து அவரிடம் கூறிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “சகோதரன் காலின்ஸ் அவர்களே, நேர்மையாய் நான் கூறுகிறேன்…” என்றேன். நான், “நான் ஏறக்குறைய முப்பது வயதுடைய ஒரு பிரசங்கியாக இருக்கிறேன். எனவே நான் ஒரு பிரசங்கம் என்றால் என்னவென்பதை நிச்சயமாகவே அறிந்திருக்க வேண்டும்” என்றேன். மேலும் நான், “ஆனால் என் பிரசங்கமோ நான் எப்போதும் கேட்டதிலேயே எதிர்ப்பர்ப்பைவிட குறைவான சொல்நயமற்றதாக உள்ளதே” என்றேன். 12 அவர் ஒரு மெத்தோடிஸ்டு ஊழியக்காரர். அவருடைய சகோதரனும் மெத்தோடிஸ்டு ஸ்தாபனத்தில் முற்றிலுமாய் ஈடுபாடு கொண்ட ஒரு மனிதனாயிருக்கிறார். அவர், “நல்லது” என்று கூறிவிட்டு, அவர், “சகோதரன் பிரான்ஹாம் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நிறுத்தற்குறியீடுகளும், உங்களுடைய வாக்கியங்களும் மற்றுமுள்ள அதுபோன்ற காரியங்களும் சரியாக முடியாமலிருக்கலாம்” என்று கூறி, “ஆனால் பெந்தேகோஸ்தே நாளன்று தன்னுடைய சொந்த பெயரை—பெயரைக்கூட கையொப்பமிட முடியாத அந்த நபர் பிரசங்கித்ததைக் குறித்து எப்போதாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? அவனுடைய பெயர் பேதுரு” என்று கூறினார். மேலும், “அதுவும் சரியாக நிறுத்தற்குறியிடப்படவில்லை என்றே நான் யூகிக்கிறேன்” என்றார். 13 ஆனால் நீங்கள் பாருங்கள், ஒரு மனிதனை அதன்மீது அவனுடைய கண்களைப் படச்செய்து புரிந்து கொள்ளுகிறது எது? நீங்கள் இந்த வானொலி ஒலிபரப்புகளை கேட்கிறீர்கள். அவையாவுமே எழுதப்பட்டவை, நீங்களே பாருங்கள். அவர்களால்—அவர்களால் அதை எழுதி, அதற்கு நிறுத்தற்குறியிட்டு இன்னும் மற்ற காரியங்களையும் செய்ய முடிகிறது. ஏனென்றால் அவர்கள் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். 14 நான் சார்லஸ் புல்லர் (Charles Fuller) அவர்கள் ஒரு நீர்த்தொட்டியைப் போன்ற இடத்திற்குப் பின்னாலே உள்ள தன்னுடைய மேடையில் பிரசங்கிக்கையில், அவரோடு நின்றேன். அவர் கூறின ஒவ்வொரு காரியத்தையும், அவர் எண் ஒன்று, எண் இரண்டு, எண் மூன்று, எண் நான்கு என்ற விதமாக எல்லாவற்றையும் தெளிவாக எழுதி வைத்துக் கொண்டு, அது எவ்வளவு நேரத்திற்கு என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அவை யாவும் தணிக்கை செய்யப்பட்டன. ஒவ்வொரு காரியத்தையும் வானொலி நிகழ்ச்சிக்கென்று தணிக்கை செய்தனர். 15 நான் பில்லி கிரஹாமோடுமிருந்து அவருடைய பிரசங்கத்தையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் அங்கே நின்று அதை பேசுகிறார்கள். அப்படியே அவர்களால் படிக்க முடிந்தளவு வேகமாக அதை வாசிக்கிறார்கள். அவை யாவுமே முன்னதாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளன. ஆகையால் நீங்கள் அந்த நிறுத்தற் குறியீடுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நான் யூகிக்கிறேன். 16 ஆனால் என்னோடுள்ள தொல்லையென்னவெனில், என்னாலே அதை வாசிக்கவுங்கூட முடியாது. ஆகையால் நானும் அதை எழுதிவிட்டால், என்னாலேயே அதனை திரும்ப வாசிக்க முடியாது என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். ஆகையால்—ஆகையால் இதுவோ அவர் நமக்காக என்ன செய்ய முடிகிறது என்பதைக் காணும்படியான ஆச்சரியமான கிருபையாயுள்ளது. அவ்வாறில்லையா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்—ஆசி.] ஆனால் நான் இந்த பழைய வருட முடிவில் ஒரு புதிய வருடத்தை துவங்கும்படி இப்பொழுது ஆரம்பிக்க நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 17 நான் ஜெப வரிசையைக் கவனித்தேன். நான் நிச்சயமாகவே அந்த ஜெபவரிசையினால் திருப்தியடையவில்லை. நான் ஒரு புதிய செய்தியை நானாகவே திரும்ப கேட்டது இதுவே முதல் முறையாகும். அப்பொழுது நான் நிச்சயமாகவே ஆச்சரியப்பட்டேன். ஆனால் ஜெப வரிசைகள் சரியாக நடை பெறவில்லை. இல்லை. அதாவது சற்று கழித்து அது நடைபெறும்போது அவர்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொருவரும், அவர்கள் அதை விசுவாசிப்பதற்கு முன்னரே அதை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வருடத்தின் முதல் துவக்கத்திலேயே நான் அதை மாற்ற விரும்புகிறேன். ஜெப வரிசையை துவங்கி எங்கெங்கே தேவன் என்னிடத்தில் பேசுகிறாரோ, அப்பொழுது நான், “இந்த நபர் சரியாக இல்லை”என்று கூறுவேன். இல்லையென்றால் ஏதோ காரியம் தவறாயிருக்கும். அப்பொழுது நான் அவனை நிறுத்தி விட்டு, மற்றவர்களையும் வரிசையினூடாக செல்ல அனுமதிப்பேன். காரணமென்னவெனில் நீங்கள் அவ்வாறு செல்லுகையில் முழுமையாக புரிந்து கொள்ளுகிறதில்லை. புரிகிறதா? அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்றும், அவர்கள் யாராயிருக்கிறார்கள் என்றும், அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தேவனோடு சரியாக ஒழுங்கில் இல்லாத ஏதோ காரியம் கண்டறியும்போது அந்த நேரத்தில் அந்த ஒருவரை நிறுத்தி, “இந்த ஒருவர்தான்” என்று கூறுகிற நேரமாய் அது இருக்கும். புரிகின்றதா? எனவே நான் அவைகளைக் கேள்விப்பட்ட காரணத்தால் சகோதரன் லியோ, அங்கே ஏதோ ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று நினைக்கிறேன். ஆகவே தேவன் அதற்கு வருகின்ற வருடத்தில் நமக்கு உதவி செய்வார் என்று நான் நம்புகிறேன். 18 இப்பொழுது இன்றிரவு அவர்கள் இங்கே கூடாரத்திலே ஆராதனைகளை வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் இன்றிரவு இங்கே சகோதரன் ரடல் அவர்களோடு 62 என்ற எண் கொண்ட கட்டிடத்தில் இருக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவர்கள் இங்கே முழு இரவு ஜெப ஆராதனையை நடத்தப் போகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். சகோதரன் ரடல் அவர்கள் அந்த முழு இரவு ஜெபத்திற்கு வரும்படி என்னை கேட்டிருந்தார். ஆனால் அந்த இரவிற்காக ஒருவேளை நான் திரும்பவும் கூடாரத்திற்கு வரவேண்டியிருக்கும் என்று எண்ணினேன். ஏனென்றால் நான் எப்பொழுதுமே புதிய வருடத்தின் முந்தின நாள் மாலை கூடாரத்தில் இருக்கும்படி முயற்சி செய்து வருகிறேன். நான் இங்குள்ள சகோதரர்களோடு திரும்பிவர விரும்பினேன். ஆகையால் நான் இன்றிரவு சகோதரன் ரடல் அவர்களோடு ஒரு—ஒரு சபையாக மாற்றப்பட்டிருக்கிற 62 என்ற எண்ணுள்ள பழைய பொதுச் சங்க கட்டிடத்திலே 62 என்ற எண் கொண்ட இடத்தில் இருப்பதாக ஒருவிதமாய் ஒப்புக்கொண்டேன். ஆகையால் புதன்கிழமை இரவு அந்த முழு ஜெப ஆராதனையிலே இங்கே திரும்பவும் இருப்போம். அதன்பின்னர் வியாழக்கிழமை நாங்கள் சிக்காகோவிற்கு புறப்பட்டு செல்லுகிறோம். அதன் பின்னர் தொடர்ந்து சென்று பிலதெல்பியாவிற்கும், அதையடுத்து கடல்கடந்து அயல்நாடுகளுக்கும் செல்லுகிறோம். 19 இக்காலையில் நாங்கள் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்க விரும்பவில்லை. ஏனென்றால் எங்களுக்கு நேர்முகப் பேட்டிகளும் அதன் பின்னர் தொடர்ந்து ஆராதனைகளும் நடைபெற உள்ளன. 20 இங்கே நடைபெற்ற கடைசி ஜெப ஆராதனையின் காரணமாக, ஓ, கடைசி ஜெப ஆராதனையிலிருந்து வந்த பலன்களுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கர்த்தருடைய ஜனங்கள் ஒன்றுகூடும்போது நம்முடைய கர்த்தரால் நிச்சயமாகவே ஒரு அற்புதமான காரியம் செய்ய முடிகிறது. “கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவர்கள் ஒன்றுகூடி ஜெபிக்கையில் தேவன் பரலோகத்திலிருந்து அதை கேட்பார்” என்பதே அதன் வழி என்று நான் விசுவாசிக்கிறேன் 21 ஆகையால் இப்பொழுதும் நாம் நமக்கு தேவைப்படுகிற இந்த செய்திக்கான ஆவியின் ஏவுதலை அவர் நமக்கு அளிக்கும்படி எதிர்நோக்கியிருக்கையில், அப்படியே ஒரு வினாடி நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோமாக. 22 கர்த்தாவே, எல்லா தலைமுறைகளிலும் நீரே எங்களுடைய அடைக்கலமும், பெலனுமாயிருந்து வந்திருக்கிறீர். எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்கு முன்னரே உம்மிடத்தில் நம்பிக்கை வைத்து வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். அவர்கள் உம்முடைய பரிசுத்த நாமத்தில் விசுவாசங்கொண்டபடியால் பிரகாசிக்கும் விளக்குகளைப்போல வெளியே கொண்டு வரப்பட்டனர். கால மணல்களின் மேலுள்ள அடிச்சுவடுகள் என்று புலவன் கூறியிருக்கிறபடியால், நாங்கள் அவர்களை நோக்கிப் பார்க்கிறோம். புலவன், “எங்களுடைய பிரிவின்போது எங்களுடைய அடிச்சுவடுகளை கால மணல்களின்மேல் விட்டுச்செல்கிறோம்” என்று கூறினான். ஆகையால் உம்மில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் ஒருமுறைகூட கைவிடப்படாமல் எப்பொழுதும் வெற்றியுடனே மீட்கப்பட்டனர் என்பதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் அநேக ஆழமான தண்ணீர்களினூடாகவும், பெரிதான சோதனைகள் மற்றும் உபத்திரவங்களினூடாகவும் சென்றபோதிலும் முடிவிலே நீர் அவர்களை வெளியே கொண்டு வந்து, அதே சமயத்தில் “முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக” ஆக்கினீர். ஏனென்றால் நீர் இதை செய்வீர் என்பது உம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருக்கிறது. 23 நீர் இந்த சிறிய சபையை இன்றைக்கு ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இதனுடைய போதகரும், எங்களுடைய நல்ல சகோதரனுமாகிய சகோதரன் நெவிலையும், அவருடைய குடும்பத்தினரையும் ஆசீர்வதியும். வருகின்ற இந்த வருடத்தில் நீர் அவரோடு அப்படியே இருக்க வேண்டும் என்றும், அவரை மகத்தாய் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வழியிலும் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். அவருடைய குடும்ப ஆரோக்கியத்தையும், வளர்ந்து கொண்டிருக்கிற சிறு பிள்ளைகளையும் திடப்படுத்தும். சகோதரன் நெவிலை பலத்தோடும், ஆரோக்கியத்தோடும் காத்துக்கொள்ளும். 24 இந்த சபையையும், இதில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினரையும் ஆசீர்வதியும். தர்மகர்த்தா குழுவையும், உண்மையான தீரமுள்ள தேவனுடைய மனிதர்களை நாங்கள் எவ்வளவாய் நேசிக்கிறோம்; கண்காணிக் குழுவையும் நேசிக்கிறோம். அவர்களும்கூட உம்முடைய தீரமுள்ள ஊழியக்காரராயிருக்கிறார்கள். கர்த்தாவே இங்கு வருகிற எல்லா ஜனங்களுக்காகவும், நாங்கள் அவர்களுக்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அநேக ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மூலையில் காட்டுப் புதர்செடிகள் வளர்ந்து காணப்பட்ட இந்த சிறிய பழைய குட்டையானது தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று ஒரு கலங்கரை விளக்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது என் இருதயத்திற்கு இன்பமளிக்கிறது. தேவனே இயேசுவானவர் வரும்வரையில் இது நிலைத்திருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இங்கு இருக்கின்ற அநேக மகத்தான ஆத்துமாக்கள் அந்நாளில் வரும்படியான ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்படுவதாக. இதை அருளும். 25 கர்த்தாவே இந்த காலையில், நாங்கள் உம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை திறக்கையில், அதிலிருந்து ஒரு பாடப்பகுதியை வாசிக்கும்படி பக்கங்களை திருப்புகையில், உம்மால் மாத்திரமே சந்தர்ப்பத்திற்கேற்ப பாடப்பொருளை அளிக்கமுடியும் என்று நாங்கள் அறிவோம். தேவனே உம்முடைய வார்த்தையை நீரே அபிஷேகியும் என்றே நான் ஜெபிக்கிறேன். அது ஜனங்களுடைய இருதயத்தண்டை நேராகச் சென்று, அவர்களுக்கு நன்மை செய்வதாக. அவிசுவாசிகளிலிருந்து விசுவாசிகளாக்கும். கிறிஸ்தவர்களை திடப்படுத்தும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும். அதைரியப்படுத்தப்பட்டவர்கள தைரியப்படுத்தும். உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளும். கர்த்தாவே இதைச் செய்கையில் பேசப்போகும் உதடுகளையும், கேட்கப்போகும் காதுகளையும் விருத்தச்சேதனம் செய்யும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 26 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதற்கொண்டு நான்…என் இருதயத்தில் பட்ட ஒரு சிறு பாடப்பொருளை அறிவித்து வந்தேன். நான் இயேசுவை காணும்படி வந்து கொண்டிருந்த சாஸ்திரிகளின் பேரிலும், அவர்கள் கிழக்கிலிருந்து மேற்கிற்கு பின்தொடர்ந்த நட்சத்திரத்தின் பேரிலும் பேசிக்கொண்டிருந்தேன். நான் அதை ஆய்ந்து படிக்கையில், எனக்கு ஒரு வேத வாக்கியம் மனதில் பட்டது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தினநாள் மாலை இங்கே வரமுடியவில்லை. ஏனென்றால் சில சிறைச்சாலை ஊழியங்கள் போன்றவை இருந்தபடியால் நான் அங்கிருக்க வேண்டியதாயிருந்தது. எனவே இன்றைக்கு நான் ஏன் சிறிய பெத்லகேம்? என்ற பொருளைக் குறித்துப் பேசலாம் என்று எண்ணினேன். 27 சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான தீர்க்கதரிசி மீகாவின் புத்தகம் 5-ம் அதிகாரம் 2-ம் வசனத்திலிருந்து நான் வாசிக்க விரும்புகிறேன். அது இந்தவிதமாக வாசிக்கப்படுகிறது. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. 28 அங்கே அந்த வேதவாக்கியத்தின் மீது ஒரு புள்ளி இருந்தபடியால், அது என்ன வார்த்தையாயிருந்தது என்பதை அந்த நேரத்தில் சரியாக வாசிக்க முடியவில்லை. 29 பாலஸ்தீனாவில் உள்ள எல்லா இடங்களைக் குறித்தும் ஒவ்வொன்று உண்டு. அங்கே அநேக மிகப் பெரிய பட்டணங்களும், அதினுடைய ஸ்தலங்களும், வரலாற்று சிறப்பில் அதிகமாய் அறியப்படுகின்ற பட்டணங்களும், சிறந்த அரணிப்பாக்கப்பட்ட பட்டணங்களும் உள்ளன. அப்படியிருந்தும் ஏன் தேவன் தம்முடைய குமாரனின் பிறப்பிடமாயிருக்கும்படிக்கு சிறிய பெத்லகேமைத் தெரிந்து கொள்ள வேண்டும்? அங்கே அநேக மகத்தான பட்டணங்கள் உண்டே. உதாரணமாக, சரித்திர புகழ்பெற்ற எருசலேம், பெருமைக்குரிய எருசலேமே அவை எல்லாவற்றிற்கும் தலைநகரமாய் உள்ளது. அது பாலஸ்தீனாவில் உள்ள மிகப்பெரிய பட்டிணங்களில் ஒன்றாகும். அப்படியிருக்கையில் ஏன் தேவன் தம்முடைய குமாரனின் பிறப்பிடமாக அந்த சிறிய பெத்லகேம் பட்டணத்தை தெரிந்தெடுக்க வேண்டும் என்று நாம் வியப்படைகிறோம். 30 ஆனால் வேத வாக்கியங்களோ, “தேவன் எதைச் செய்யும்படி தீர்மானிக்கிறாரோ, அதுவே செய்யப்படும்” என்று உரைத்துள்ளன. தேவன் அது அந்த விதமாய் இருக்க வேண்டும் என்று முன்நியமித்திருந்தார், இல்லையென்றால் அது ஒருபோதும் அந்தவிதமாக இருந்திருக்காது. அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் வேத வாக்கியமானது, “எந்த காரியமும் தற்செயலானதல்ல” என்று கூறுகிறது. தேவன் ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருந்தார். இல்லையென்றால் அது அந்தவிதமாய் சம்பவித்திருக்காது. தேவன் அதை அந்தவிதமாக உண்டு பண்ணினார். 31 அதன்பின்னர் நாம் நம்முடைய குறிப்பிட்ட குறுகிய சிந்தையில், “பரலோகத்தின் மகத்தான இராஜாவானவர் தலை நகரத்தைத் தெரிந்து கொள்வதற்குப் பதிலாக ஏன் இதைப் போன்ற ஒரு சிறிய இடத்தைத் தெரிந்து கொண்டார்?” என்று சிந்திக்க துவங்குகிறோம். ஏதோ ஒன்றிற்கு பதிலாக… 32 பெத்லகேமில் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் மகத்தான ஆவிக்குரிய பின்னணியைக் கொண்டிருந்த அநேக ஸ்தலங்களும்கூட இருந்தன. உதாரணமாக சீலோவைப் போன்ற சில இடங்கள், சீலோ இஸ்ரவேலரின் பண்டைய ஆராதனை ஸ்தலமாக இருந்தது. அங்கே எல்லோரும் வருடா வருடம் வருவார்கள்…இந்த மகத்தான இடத்தில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் தங்கியிருந்தது. அப்படியானால் ஏன் அவர் சீலோவில் பிறக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்று வியப்படைகிறோம். 33 அதன்பின்னர் அங்கே கில்கால் இருந்தது. அது ஆவிக்குரிய மற்றொரு மகத்தான ஆராதனை ஸ்தலமாயிருந்தது. அப்படியானால் தேவன் ஏன் அவரை கில்காலில் பிறப்பிக்கும்படி அனுமதிக்கவில்லை? 34 அங்கே மற்றொன்று சீயோன் இருந்தது. சீயோன் மலையின் உச்சியில் இருந்தது. அப்படியானால் இயேசுவானவர் ஏன் சீயோனில் பிறக்கவில்லையென்று நாம் வியப்படைகின்றோம். ஏனென்றால் அது கர்த்தர் தம்முடைய ஜனங்களை காலங்கள் தோறும் ஆசீர்வதித்திருக்கிற ஒரு மகத்தான சரித்திரப்பிரகாரமான அடையாளச் சின்னமாகவே இருந்து வருகிறது. 35 அவர் சீயோனை அல்லது கில்காலை அல்லது—அல்லது சீலோவை அல்லது மகத்தான ஆசீர்வாதங்களையும், மகத்தான போதனைகளையும் உடையதாயிருந்து வந்த மற்ற மகத்தான ஸ்தலங்களில் ஒன்றை தெரிந்து கொண்டிருக்கலாம் என்பது போல் காணப்படலாம். 36 அங்கே எபிரோன் போன்ற பட்டணங்களும் இருந்தன. அது ஒரு மனிதனுக்கு வேண்டியதாயிருந்த ஒரு அடைக்கலப் பட்டணமாய், ஒரு பாதுகாப்பு ஸ்தலமாய் இருந்தது. அங்கே ராமோத்—கிலேயாத் என்ற மற்றொரு அடைக்கல ஸ்தலமும்கூட இருந்தது. அங்கும் ஜனங்கள் வருவார்கள். அது அவர் பிறப்பதற்கான மிகப் பொருத்தமான இடமாய் இருந்திருக்கும். 37 ஒருக்கால் நான் அதை சிந்தித்துக் கொண்டிருந்திருந்தால், நான் அவரை காதேஸ்பர்னேயாவிற்கு கொண்டு வந்திருப்பேன், ஏனென்றால் அது நியாயத்தீர்ப்பின் ஆசனமாயும், மற்றும் ஒரு அடைக்கல ஸ்தலமாகவும் இருந்தது. ஒருவேளை நான் அவருடைய பிறப்பிடமாயிருப்பதற்காக அவரை அந்த தேசத்திற்கு கொண்டு வந்திருப்பேன். இல்லையென்றால் நாம் ஒருக்கால் வேறெந்த பட்டணங்களில் ஒன்றையாவது தெரிந்து கொண்டிருப்போம். 38 ஆனால் உங்களுக்குத் தெரியும், வேதாகமத்தில் வெறுமனே சிறிய முக்கியமேயில்லாத காரியங்களும்கூட மிகப் பெரிதான பொருளைக் கொண்டுள்ளது என்பதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அது இயேசுவானவர் கூறினதான இருந்தது என்றே நான் நினைக்கிறேன். அதாவது, “நீங்கள் நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளை விட்டுவிடுகிறீர்கள். சரியாகக் கூறினால், சிறிய காரியங்களை விட்டு விடுகிறீர்கள்” என்பதேயாகும். ஆனால் சில நேரங்களில் சிறிய காரியங்களே பெரிய காரியங்களை ஒன்று சேர்ந்து பிடித்துக் கொள்கின்றதாயிருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் எல்லாமுமான அந்த பெரிய பற்சக்கரங்கள் இங்கே தேவன் அவைகளை நியமித்தவிதமாக சுழன்று கொண்டிருக்கின்றன். அவைகளில் ஒன்றுகூட ஒருபோதும் அதினுடைய ஸ்தானத்தைவிட்டு அகலாது. தேவன் எல்லா காரியங்களையும் முன்நியமித்திருக்கிறார். அது சரியாக அந்த இடத்தை அடைய வேண்டும். 39 நாம் அதைப் போன்ற விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும்போது, “இவை எல்லாவற்றிற்கும் பின்னால் யார் இருக்கிறது? இந்த தேவனுடைய மகத்தான பிரமாண ஒழுங்கு முறைத்திட்டத்தில் சுழன்று கொண்டிருக்கிற முக்கிய சுருள் கம்பி எது?” என்பதைக் குறித்து நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். அது பரிசுத்த ஆவி என்பதை நாம் கண்டறிகிறோம். இந்த காரியங்களை செய்யும்படி, அவை மனிதனுடைய கரங்களில் விடப்படவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கரங்களிலே விடப்பட்டுள்ளது. அவரே அந்த முக்கிய சுருள் கம்பியாய் இருக்கிறபடியால், அவர் மற்ற கருவியின் மற்ற பாகங்களை இயக்குவாரானால், அப்பொழுது அவை அப்படியே பரிபூரணமாக செயல்பட்டு, சரியான தேவனுடைய நேரத்தைக் காத்துக் கொள்ளும். 40 ஆகையால் நாம் அதை காண்கிறோம். நாம் மகத்தான காரியங்களை நோக்கிப் பார்க்கையில், எப்படி நாம் அவைகளை பெற்றுக்கொள்வோம் என்று நம்முடைய சிந்தையில் நாம் வியப்படைகிறோம். ஆகவே அது நமக்கு இன்றைக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. அதை நினைத்துப் பார்க்கையில் நாம் ஒரு சிறுகூட்ட ஜனங்களாயிருக்கலாம். நாம் உலகத்திற்கும், பெரிய ஸ்தாபன சபைகளுக்கும் முக்கியத்துவமில்லாதவர்களாயிருக்கலாம். அதே சமயத்தில் தேவன் அந்த சிறிய, எளிமையான காரியங்களை சில நேரங்களில் உபயோகிக்கிறார். 41 அது, “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்றுகூட வேத வாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. என்னே ஒரு ஆறுதல்! பிதாவானவர் அந்த சிறுமந்தைக்கு இராஜ்யத்தை கொடுக்கும்படியாகவே இயேசுவானவர் அந்த சிறிய பெத்லகமில் பிறக்க வேண்டியது அவ்வளவு நிச்சயமாயிருந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன். ஏனென்றால் அது எழுதப்பட்டிருக்கிறதே. வேத வாக்கியங்களெல்லாம் வேத ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. வேத வாக்கியங்கள் தவறிப் போகமுடியாது. அவைகள் நிறைவேற வேண்டும். ஆகையால் இராஜ்யத்தை பெற்றுக்கொள்ளப்போவது ஒரு சிறுமந்தை. ஒரு உண்மையுள்ள விசுவாசிகளின் சிறுகூட்டமாயிருக்கும் என்பதை அறியும்போது அது நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. நான் அந்த சிறு மந்தையில் அல்லது அந்த மந்தையில் உள்ளவர்களில் ஒருவனாயிருக்க வேண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் அவ்வாறே கூறவேண்டும். 42 நாம் அந்த கதையை அறிவோம். இஸ்ரவேலர் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம் எப்படி பாலஸ்தீனாவிற்குள் வந்தனர் என்பதைக் குறித்த அந்தக் கதையை அநேகமாக நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் அவர்களுடைய பங்கை பங்கிட்டுக் கொடுத்தவன் அந்த மகத்தான யோசுவாதான் என்பதை நாம் அறிவோம். 43 நிச்சயமாகவே நமக்கு இதைக் குறித்து இப்பொழுது நேரமிருக்குமானால், இன்றிரவு ஆறு மணி வரை இந்தப் பொருளின் பேரிலேயே தரித்திருந்து இந்த காரியங்களை ஒரு வரிசையில் அமைத்து, அவைகளின் உண்மையான பொருளை அறிந்து கொள்ளும்படி செய்தால் நலமாயிருக்கும். ஆனால் நமக்கோ நேரமில்லை, ஏறக்குறைய முப்பது, நாற்பது நிமிடங்களே உள்ளன. ஆகையால் நாம் தொடர்ந்து செல்கையில், நாம் மனதில் பதிய வைக்க வேண்டிய உயரிய கருத்துக்களையும், அதின் எஞ்சிய காரியங்களையும் பரிசுத்த ஆவியானவர்தாமே வேதத்தை வாசிப்பவர்களாகிய உங்களுடைய இருதயத்திற்குள் பதியச் செய்வார் என்று நம்புகிறேன். 44 யோசுவா இந்த பாகங்களை அவர்களுக்கு பாலஸ்தீனாவில் எவ்வாறு பங்கிட்டான்? அவை ஆவியின் ஏவுதலினால் எவ்வாறு பங்கிடப்பட்டன? அந்த கோத்திரப் பிதாக்களின் எபிரெய தாய்மார்கள் குழந்தைகளை பிரசவிக்கும்போது, அவைகளுடைய பிரசவ வேதனையில், அவள் குழந்தையை பிரசவிக்கும்போது அவள் கூறின அந்த இடத்திலேயே அந்த கோத்திரப் பிதாக்கள் கடைசி நாட்கள் வரை குடியிருப்பார்கள். 45 ஆவியின் ஏவுதலைக் குறித்துப் பேசுவோம். இந்த வேதாகமம் ஆவியில் ஏவப்பட்டிருக்கிறது. அது எவ்வளவு சிறியது என்பது முக்கியமல்ல, ஒவ்வொரு சிறு வேத வாக்கியமும் வேதத்தில் உள்ள மகத்தான காட்சியில் முதன்மையான பொருளை உடையதாயிருக்கிறது. அவையாவுமே, ஒவ்வொரு—ஒவ்வொரு வார்த்தையுமே ஆவியினால் ஏவப்பட்டிருக்கிறது. அது ஆத்துமாக்களின் இலக்கை தெரிவிக்கிறது. ஏனென்றால் அது அழிவில்லாத நித்திய தேவனின் வார்த்தையாயிருக்கிறது. 46 அந்த தாய்மார்களும்கூட குழந்தைகள் பிறக்கும்போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவர்கள் எங்கிருப்பார்கள் என்று தங்களுடைய வாய்மொழியில் கூறினார்களோ அந்த இடத்திலேயே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து அவர்கள் சரியாக அமர்த்தப்பட்டனர். யோசுவா அதை அறியாமல், அதே சமயத்தில் அதே ஆவியின் ஏவுதலோடு அவர்களை சரியாக எங்கே இருக்க வைக்க வேண்டிதாயிருந்ததோ அங்கேயே அவர்களை அமர்த்தினான். 47 யோசுவா பங்கிடுகையில், யூதாவின் பாகத்தைப் பங்கிட்டான். நீங்கள் வரைபடத்தில் கவனிப்பீர்களானால், அது நில அமைப்பின்படி மேற்கு சமவெளி சமுத்திரத்திற்கு ஒரு சில மைல்கள் தூரத்தில் உள்ள தெற்கு எருசலேம் தலைநகருக்கு அருகில் இருந்தது. யூதா தன்னுடைய பாகத்தை பெற்றுக்கொள்ளும்போது, சரியாகக் கூறினால், தேசத்தில் அவனுடைய மாகாணம், நாம் அதை அவ்வாறே அழைப்போம், அது விநோதமாயிருக்கிறது. ஆனால் இந்த சிறு பட்டணமாகிய பெத்லகேம் வரைபடத்தில் குறிப்பிடப்படவுமில்லை. அதே சமயத்தில் அது அங்கிருந்தது. ஏனென்றால் அந்த ஆபிரகாம்…ரெபேக்காள் அந்த இடத்தில் தான் அடக்கம் பண்ணப்பட்டாள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது ஏதோ ஒருவிதமான ஒரு சிறு கிராமமாய் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் யோசுவா 5-ம் அதிகாரத்தை வாசிப்பீர்களானால், யூதாவின் ஆளுகையின் கீழ் கிராமங்களையும், சிறு பட்டணங்களையும் தவிர நூற்றுப் பதினைந்து பெரிய பட்டணங்கள் இருந்தன என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். அதாவது நூற்றுப் பதினைந்து பட்டணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒருவேளை அது பங்கிடப்பட்டபோதோ, அந்த பெத்லகேமானது மிகவும் சிறியதாயிருந்து, ஒருக்கால் வெறுமனே ஒரு வீடு அல்லது இரண்டு வீடுகளைக் கொண்டிருந்தபடியால் அது சுதந்திரவீதத்தில் குறிப்பிடப்படாமலும்கூட இருந்திருக்கலாம். ஆகையால் அது உண்மையிலேயே அறியப்படவேயில்லை…என்பதை நாம் கண்டறிகிறோம். 48 அதை ஸ்தாபித்தவன் காலேபின் குமாரன், காலேபின் குமாரனாயிருந்தான், அவனுடைய பெயர் சல்மோன், அவனே அதை ஸ்தாபித்தான்; அவனே அதினுடைய தகப்பனாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது. அதின் பொருள் என்னவெனில் அவன் பெத்லகேமின் ஸ்தாபகனாயிருந்தான் என்பதேயாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், அவன் அங்கே குடிபெயர்ந்து சென்று, ஏதோ ஒரு வியாபாரத்தை செய்ய துவங்கி, வணிக ரீதியில் அந்த வியாபாரமானது வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அதன் பின்னர் அதைக் குறித்த உண்மையான காரணம் என்னவெனில், எல்லா தேசங்களும் அந்த சிறு துண்டு நிலத்தைக் குறித்து பொறாமை கொண்டிருந்தன. அது வடக்கு மற்றும் கிழக்குப் பக்கமாகவும், அந்த வரைபடமுனை சற்று தெற்குப் புறமாக வரைபடத்தில் சாய்ந்திருக்கிறது. அது பாலஸ்தீனாவிலேயே மிகவும் செழிப்புள்ளதாயிருந்தது. அது ஒரு—ஒரு தானிய விளையச்சலையும், கோதுமை விளைச்சலையும் கொண்டதாயிருந்தது. யூதேயா மாகாணத்தின் கடைசியில் உள்ள பாலஸ்தீனாவில் உள்ள பெத்லகேமில் பெரிய ஒலிவத்தோப்புகள் இருந்தன. 49 அது ராகாப் வேசியின் குடியிருப்பு ஸ்தலமாக மாறினது என்பதை நாம் கண்டறிகிறோம். இஸ்ரவேலர் யோர்தான் நதியின் எல்லையோரமாய் கடந்து சென்று பாலஸ்தீனாவிற்குள் சென்றனர். நாம் அந்த ராகாப் வேசியின் கதையை நன்கு அறிந்திருக்கிறோம். நாம் இந்த காலையில் இப்பொழுது ஒரு சில நிமிடங்கள் அவளைப் பற்றி சித்தரிப்போமாக. ஒரு—ஒரு வாலிப ஸ்திரீ, ஒரு அழகான வாலிபப் பெண்ணாயிருந்த காரணத்தால் அவளுடைய வாழ்க்கையில் உண்டான ஏதோ ஒரு இன்னலினால் பலவந்தம் பண்ணப்பட்டாள். ஒரு அஞ்ஞான ஸ்திரீயாயிருந்தாள், அவள் ஜீவித்துக்கொண்டிருந்த ஜீவியத்தில் பலவந்தம் பண்ணப்பட்டிருந்தாள். அநேக முறை ஜனங்கள் அவர்கள் ஜீவிக்கின்ற ஜீவியத்தில் பலவந்தம்பண்ணப்படுகின்றனர். 50 நான் அன்றொரு இரவு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைக் காணும்படி சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். அப்பொழுது நான்—நான் அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்து அவனிடம் பேசினேன். நான், “அது போன்ற ஒரு காரியத்தை செய்ய நீ ஏன் விரும்பினாய்?” என்று கேட்டேன். அப்பொழுது அவன் என்னுடைய கரத்தைப் பற்றிக் கொண்டு, பேசத்துவங்கினான். அப்பொழுது அவன் செய்து கொண்டிருந்த காரியத்தில் அவன் பலவந்தம் பண்ணப்பட்டான். அதற்கு நான், “நீ அதை செய்ய பலவந்தம் பண்ணும்படி உன்னை அனுமதித்ததுதான் காரணம். நீ அதைச் செய்ய வேண்டியதில்லை. எந்த மனிதனுமே குடிக்க வேண்டியதில்லையே” என்று கூறினேன். மேலும் நான், “நானே நரம்பு தளர்ச்சியுடையவன், ஆனாலும் அதற்கு எதுவுமே வேண்டியதில்லையே” என்றேன். 51 இந்த வாலிபப் பெண்மணி, அவள் முதல்முதலில் இஸ்ரவேலைக் குறித்தும், ஜெபத்திற்கு பதிலளித்திருந்த ஒரு தேவனைக் குறித்தும் கேள்விப்பட்ட பிறகு, ஜெபிப்பதற்கான ஒரு தேவனாய் மட்டுமின்றி, அதற்கு திரும்ப பதில் அளித்த ஒரு தேவன் என்பதைக் குறித்தும் கேள்விப்பட்டிருந்தாள். அங்கே ஒரு அற்புதங்களின் தேவன், அற்புதங்களை நிகழ்த்த முடிந்த தேவன், சமுத்திரத்தை வற்றிப்போகப் பண்ணின தேவன், வானத்திலிருந்து அப்பங்களை வருஷிக்கப் பண்ணினார் என்பதைக் குறித்து கேள்விப்பட்டபோது அவளுடைய இருதயம் நடுங்கத் துவங்கினது. அவள் அங்கு சென்றிருந்த இரண்டு பிரசங்கிமார்களிடத்திலிருந்து முதல் செய்தியை பெற்றுக் கொண்டபோது, உடனடியாக அதை அவளுடைய முழு இருதயத்தோடு ஏற்றுக்கொண்டாள். அவள் தன்னுடைய வீட்டு ஜன்னலில் ஒரு சிவப்பு கயிற்றைக் கட்டி அவளுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக தொங்கவிட்டாள். ஏனென்றால் அவள் செய்தியை ஏற்றுக் கொண்டிருந்தாள். 52 நான் இங்கே தொடர்ந்து கூறுகிறேன், அவள் புறஜாதி சபைக்கு மாதிரியாயிருந்தாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவள் ஒரு புறஜாதியாயிருந்தாள். அவள் செய்தியை கேட்டபோது, அவள் புறஜாதி சபைக்கு ஒரு மாதிரியாயிருந்தாள். நாம் எல்லோருமே ஆவிக்குரிய விபச்சாரத்தில், பரலோகத்தின் தேவனுக்கு எதிராக எல்லா விதமான காரியங்களிலும், எல்லா விதமான ஸ்தாபனங்களோடும், மார்க்கங்களோடும் ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் நாமோ ஜீவிக்கின்ற தேவன் ஒருவர் உண்டு என்றும், அற்புதங்களை நிகழ்த்தினவர் ஒருவர் உண்டு என்று கேள்விப்பட்டபோது உடனடியாக நாம் செய்தியை ஏற்றுக் கொண்டோம். 53 அங்கே சிவப்பு நூல் கயிறானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமாக பயன்படுத்தப்பட்டது. அவள் அதை எப்படி தன்னுடைய வீட்டு ஜன்னலிலிருந்து வெளிப்படையாகத் தொங்கவிட்டாள் என்பதை நீங்கள் அறிந்துள்ளபடியால் அந்த சம்பவத்திற்குள் விபரமாக செல்வதை குறைத்துக் கொள்கிறேன். இரத்தம் வெளிப்படையாக காட்டப்பட்டது. அந்தவிதமாகவே இரத்தமானது வெளிப்படையாக காட்ட வேண்டியதாயிருக்கிறது. அதாவது உட்புறமாக ஏதோ காரியம் சம்பவித்திருந்தது என்பதை காட்டும்படி அது சுவற்றின் வெளிப்புறத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. இந்த காலையில் கிறிஸ்துவுக்குள்ளான உண்மையான விசுவாசியும் அந்தவிதமாகவே இருக்கிறான். வெளிப்புறத்தில் வெளிப்படையாக காட்டப்படுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உட்புறத்தில் ஏதோ காரியம் சம்பவித்துள்ளது என்பதையே காட்டுகிறது. 54 தேவன் கோபாக்கினையின் சீற்றத்தோடு நோக்கிப் பார்க்க, எக்காளங்கள் முழங்கத் துவங்குகையில், அங்கே அந்த சிவப்பு கயிறானது ஒரு ஞாபகச் சின்னமாக தொங்குகிறதை தேவன் கண்டார். இரத்தத்தை கடந்து செல்வது அவருக்கு எப்பொழுதும் பிரியமாயிருக்கிறது. “நான் இரத்தத்தைக் காணும்போது நான் உங்களைக் கடந்து செல்வேன்”. அவர் அதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் அசைக்கும்போது, பூமியை குமுறச் செய்து சுமார் இருபது அடி அகலமான மதிற்சுவர்களை அசைத்து விழச்செய்யும்போது, அங்கே தொங்கிக் கொண்டிருந்த அந்த கயிற்றின் மீது ஒரு கல்கூட விழவில்லை. அது ஒரு உண்மையான விசுவாசிக்குரிய ஒரு உண்மையான தேவனின் பாதுகாப்பைக் காட்டுகிறது. நீங்கள் அந்த சிவப்பு கயிற்றை ஏற்றுக்கொள்வீர்களேயானால், அவர் உங்களை கண்டறியும்போது நீங்கள் என்ன நிலைமைக்குள் இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது வேதாகமத்தினூடாக கொண்டு செல்கிறது. 55 அதன் பின்னர் இஸ்ரவேலர்களில் ஒருவனால் அவள் தெரிந்து கொள்ளப்பட்டாள் என்பதை நாம் காண்கிறோம். அவள் யூதேயாவில் ஒரு தளபதியாக, ஒரு பிரபுவாக இருந்த ஒரு மனிதனோடு காதல் கொண்டாள். அவன் இஸ்ரவேலின் இராணுவங்களுக்கு தளபதியாயிருந்தான். அவனுடைய பெயர் சாலமோன் இராஜாவைப் போல சல்மோன் என்றிருந்தது. அவன் தளபதியாயிருந்தான். அவள் யூதேயாவின் பிரவுவாயிருந்த இந்த தளபதியோடு காதல் புரிந்தாள். அவள் முடிவாக திருமணம் செய்து கொண்டாள். இஸ்ரவேலருக்கான நிலச்சொத்து பகிர்ந்தளிக்கப்பட்டபோது, அவளும் அவளுடைய அன்புக்குரிய கணவனும் பெத்லகேமில் வசித்து வந்தனர். 56 இப்பொழுது நீங்கள் அது ஆரம்பமாவதை காணத் துவங்குகிறீர்களா? நீங்கள் காணத் துவங்கவில்லையா? [சபையார், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] பார்த்தீர்களா? அது ஆரம்பமாகத் துவங்கினது. அவள் பெத்லகேமில் ஒரு யூதனுக்கு ஒரு புறஜாதி மணவாட்டியாயிருந்து வசித்து வந்தாள். ஏன்? காரணம் அவள் அற்புதம் செய்கிற தேவனில் விசுவாசம் கொண்டிருந்தாள். பாருங்கள் அவள் துர்கீர்த்தியுள்ள வீட்டிலிருந்து, விபச்சார வீட்டிலிருந்து வந்தவள். அவளுடைய மனமாற்றமும், தேவனில் அவள் கொண்டிருந்த அவளுடைய தவறிப் போகாத விசுவாசமுமே பெத்லகேமில் ஒரு அழகான வீட்டில் இருக்கும்படிக்கு அவளை ஒரு விபச்சார வீட்டிலிருந்து கொண்டு வந்தது. என்னே ஒரு வித்தியாசம்! 57 அந்த விதமாகவே அது நாமெல்லோருக்கும் செய்கிறது. ஒரு அவிசுவாச வீட்டிலிருந்து, வெறி மயக்கங்களிலிருந்து, ஒழுக்கக்கேடான செயல்களிலிருந்தும் மற்றும் ஒவ்வொரு காரியத்திலிருந்தும் மிகுந்த அழகுள்ளதாயிருக்கிற கிறிஸ்துவிற்குள்ளான நிலையில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு வருகிறது. பரியாசமான நிலையிலிருந்து மேலான நிலைக்குக் கொண்டு வருகிறது. அது அந்த வித்தியாசத்தையே நம்முடைய மனமாற்றத்தினூடாகச் செய்கிறது. நீங்கள் அதை பார்த்தீர்களா? அவள் ஒரு தளபதியை, யூதா வீட்டுப் பிரபுவை திருமணம் செய்து கொண்டாள். அந்த தளபதி கிறிஸ்து தனக்கு ஒரு புறஜாதி மணவாட்டியை தெரிந்து கொண்டதற்கு மாதிரியானான். மிகவும் தாழ்வான இடத்திலிருந்து முக்கியமான, தேசத்தில் மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டாள். அது வேறொன்றாகவும் இருக்கவில்லை என்பதை நிரூபிக்கும்படி நாம் அதை நம்முடைய செய்தியில் சற்று கழித்து புரிந்துகொள்வோம். அவர்கள் புறஜாதி சபைக்கும் ஒரு மாதிரியாயிருக்கிறார்கள். 58 அவர்கள் பெத்லகேமில் ஒரு அழகான வீட்டில் இருந்தனர் என்பதை நாம் கண்டறிகிறோம். சல்மோன் அதை அமைத்திருந்த காரணத்தால் அது ஒரு மகத்தான ஸ்தலமாகவும், செழிப்பான நிலங்களாகவும் மாறினது. அது உலகத்தின் அப்ப ஸ்தலமாக (Bread place) விளங்கும்படி அங்கு மகத்தான கோதுமை பயிரிடும் தேசமாக இருந்ததைக் குறித்து நினைத்துப் பார்க்க அது எவ்வளவு அழகாகவுள்ளது. அது உண்மையாயிருக்கிறது. இயேசுவானவர் அங்கு பிறக்க வேண்டியவராயிருந்தார் என்பதில் வியப்பொன்றுமில்லை. ஏனென்றால் அவர் ஜீவ அப்பமாயிருந்தார். அங்கேதான் எல்லா தேசத்தினரும் தங்களுடைய கோதுமையை வாங்க வருவர். எல்லா தேசத்தினரும் தங்களுடைய தானியத்தை வாங்க வருவார்கள். ஏனென்றால் பெத்லகேம் அந்த செழிப்பான நிலங்களைக் கொண்டதாயிருந்தது. நீங்கள் பாருங்கள். மிகச் சிறிய இடம், அதாவது அது, “ஓ, கோதுமையின் மாகாணமாயிருந்தது” என்றே கூறப்படுகிறது. அதே சமயத்தில் அது ஏதோ ஒரு காரியத்தை பொருட்படுத்தினது. நீங்கள் பாருங்கள், எப்படி அந்த புறஜாதி பிரபு, இல்லை இந்த யூத பிரபு தன்னுடைய புறஜாதி மணவாட்டியை பெத்லகேமிற்கு கொண்டு சென்று பாதுகாவலாக வசிக்கும்படியான ஒரு இடத்தில் அங்கு குடியமர்த்தினான். அங்கே ஏராளமான அப்பமிருந்தன. 59 இந்த மகத்தான காதலினூடாக, விசுவாசத்திற்கான மகத்தான கீழ்ப்படிதலினூடாக, ராகாப் வேசியினுடாக நாம் கண்டறிவது என்னவென்றால், அவள் சல்மோனுக்கு ஒரு குமாரனை பெற்றெடுத்தாள். அவனுடைய பெயர் போவாஸ் என்பதாயிருந்தது. இப்பொழுது இங்கே இந்த தொடர்பில் இணைந்துள்ள மற்றொரு மகத்தான கதையை நாம் யாவரும் நன்கு அறிந்துள்ளோம். போவாஸ் சல்மோனுக்கும் ராகாப் வேசிக்கும் பெத்லகேமில் பிறந்தான். 60 நகோமி சில வருடங்கள் கழித்து மோவாபியர்களுடன் சஞ்சரிக்கும்படி தன்னுடைய தேசத்தை விட்டுப் போயிருந்தாள். அவள் அங்கிருந்தபோது அவளை கொடுமை செய்து தவறாக நடத்தியிருந்தனர். அவள் மற்றொரு ஜனங்களுக்கு மத்தியில் மற்றொரு தேசத்தில் பின்வாங்கிப்போன நிலைமைக்குள்ளாக தன்னை இணைத்துக்கொண்டு, மற்ற விசுவாசிகளின் ஐக்கியத்திலிருந்து வெளியே இருந்தாள். வேறுவிதமாகக் கூறினால் அவள் எந்த காரியமும் சரியாயிருக்கும் என்று விசுவாசித்து, உலகத்தோடு சற்று சேர்ந்து வாழவிரும்பின சபைக்குள்ளாக சேர்ந்து கொள்ளும்படி உண்மையான சபையை விட்டு விட்டிருந்தாள். அங்கே அவள் தன்னுடைய கணவனை இழந்து போனாள். 61 அது ஒவ்வொரு முறையும் சரீரப்பிரகாரமான மரணத்தையே கொண்டுவர வேண்டியதாயிருக்காது. நீ அவனை ஒரு ஆவிக்குரிய மரணத்தில் இழக்கலாம் அல்லது உன்னுடைய மனைவியை இழக்கலாம். நல்ல ஸ்தலத்தில் தரித்திருப்பதே மேலானது. மற்றவர்கள் எந்தவிதமாய் காணப்பட்டாலும், அவர்கள் எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்களுடைய சபைகளை எவ்வளவு அருமையான கோபுரங்களாக வைத்திருந்தாலும் அல்லது எவ்வளவு பெரிய மணிகள் ஒலித்தாலும் அதை பொருட்படுத்தாமல் நீங்கள் இரத்தத்தால் எங்கே மூடப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களோ அங்கேயே தரித்திருப்பது மேலானதாயிருக்கும். ஜனங்களின் பாவங்களை மூடுகிற இரத்தத்தினண்டையிலேயே நீங்கள் தரித்திருப்பது நலம். இல்லையென்றால் நீங்கள் ஒருவரையொருவர் இழந்து போவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் கர்த்தராகிய இயேசுவை இழந்துபோய் பாதுகாப்பற்றவர்களாயிருப்பீர்கள். 62 அதன் பின்னர் அவளுடைய குமாரர்கள் மரித்துப்போன பிறகு, அவள் அவர்கள் இருவரையுமே இழந்துவிட்டாள் என்பதை நாம் கண்டறிகிறோம். எனவே அந்த நேரத்தில் அந்த பட்டணத்தில் எந்த எழுப்புதலின் ஆவியும் இல்லாதிருந்த காரணத்தால் அவள் திரும்பிப் போய்விட்டாள். 63 ஓ, ஒரு சில நிமிடங்கள் நான் இங்கு தரித்திருக்கும்படி எவ்வளவாய் விரும்புகிறேன். நான் அதை இங்கே எடுத்து எப்படியாய் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். எத்தனை சபைகள் பின்வாங்கிப் போயிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இரத்தத்தின் கீழே தரித்திருங்கள். அதுவே தரித்திருக்க வேண்டிய ஸ்தலமாகும். உள்ளேயோ அல்லது வெளியிலோ, மேலேயோ அல்லது கீழேயோ, அடர்த்தியாகவோ அல்லது மெல்லியதாகவோ என்னவாயிருந்தாலும் இரத்தத்தின் கீழே தரித்திருங்கள். ஆனால், நகோமியோ இஸ்ரவேலர்கள் தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருந்த காரணத்தால், மற்ற குழுவினரோடு போய் சேர்ந்துகொள்வது மேலானதாயிருக்கும் என்று அவள் எண்ணினாள். ஆனால் அங்கோ ஆவிக்குரிய அப்பமில்லாதிருந்தது. ஆயினும் தேவன் அதை திரும்ப அளிப்பார். அதாவது “நான் அதை திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்கிறாரே.” எனவே அது எந்த இடத்திலிருது வருகிறதோ அந்த இடத்திலேயே தரித்திருங்கள். 64 ஆகையால் அவளுக்கு திரும்பிப் போக வேண்டுமென்ற வாஞ்சை உண்டாகத் துவங்கினது என்பதை நாம் கண்டறிகிறோம். ஏனென்றால் ஒரு மகத்தான எழுப்புதல் அங்கே உண்டாயிருந்தது என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். நீங்கள் கவனிப்பீர்களேயானால், நகோமி, “வாற்கோதுமை காலத்தில்,” சரியாக அறுப்பின் நேரத்தில் திரும்பி வந்தாள் என்று வேதம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், ஆவிக்குரிய பிரகாரமாக அதை பொருத்துகிறேன், அங்கே ஒரு மகத்தான எழுப்புதல் நடந்து கொண்டிருந்தபோது, சரியாக அந்த சமயத்திலேயே அவள் திரும்பி வந்தாள். ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை; அவள் எதையுமே உடையவளாயிருக்கவில்லை. 65 ஓர்பாள், அவளுடைய குமாரனின் மனைவிகளில் ஒருத்தி, அவள் எதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பதைக் காணும்படி வந்தாள். அவள் நவீன சபைக்கு ஒரு மாதிரியாயிருக்கிறாள். “நான் அங்கு செல்ல வேண்டியிருக்குமானால், நான் என்னுடைய நடனக்காட்சிகளை விட்டு தூரமாய் செல்ல வேண்டியதாயிருக்கும். நான் என்னுடைய பகட்டான நேரத்தையும், என்னுடைய கூடிமகிழுகிற கூட்டத்தினரையும் விட்டு தூரமாய் செல்ல வேண்டியதாயிருக்கும்.” ஆகையால் அவள் வெறுமனே அழுது, தன்னுடைய மாமியை முத்தமிட்டு திரும்பிச் சென்றாள். 66 ஆனால் இங்கே ஒரு அழகான காட்சியிருக்கிறது. அவளோடு ரூத் எனும் பேர்கொண்ட மற்றொரு மருமகள் இருந்தாள். அவள் புறஜாதி மணவாட்டிக்கு ஒரு மாதிரியாயிருந்தாள். அவள் தன்னுடைய மாமியை முத்தமிட்டு, “நான் எல்லா காரியங்களையும் விட்டுவிட்டேன். நான் உன்னோடு செல்லப் போகிறேன். உம்முடைய ஜனமே என்னுடைய ஜனமாய் இருக்கட்டும். உன்னுடைய தேவனே என்னுடைய தேவனாய் இருக்கட்டும். நீர் எங்கு மரிக்கிறீரோ, அங்கே நானும் மரிப்பேன். நீர் எங்கே அடக்கம்பண்ணப்படுவீரோ, அங்கே நானும் அடக்கம் பண்ணப்படுவேன்” என்றாள். அதுதான் இது. அதைத்தான் தேவன் விரும்புகிறாரேயன்றி, அந்த எல்லைக் கோட்டையோ, பாதி வழியையோ அல்ல. ஆனால் ஒரு முற்றிலுமான, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று முழுமையாக ஒப்புவிப்பதையே விரும்புகிறார். அவள் இவளை முத்தம் செய்தாள். 67 ஆயினும் நகோமியோ அவளை திடனற்றுப் போகச் செய்யும்படி கூறினாள். அதாவது, “நீ உன்னுடைய ஜனத்தாரண்டைக்கு திரும்பிப் போவது நலமாயிருக்கும். நானோ முதிர் வயதானவள், எனக்கு இனி குமாரர்கள் உண்டாயிரார்கள்” என்று கூறினாள். ஆனால் நியாயப்பிரமாணமோ, அவள் ஒரு குமாரனுக்காக காத்திருக்க வேண்டியதாயிருந்தது என்றே கூறியிருந்தது. ஆயினும் இவளோ, “எனக்கு இனிமேல் பிள்ளை உண்டாயிராது. நான் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, நான் ஒரு குமாரனைப் பெற்றாலும், அவனை மணக்க உனக்கு மிகவும் வயதாகிவிடும். ஆகையால் உன்னுடைய ஜனத்தாரண்டைக்கே திரும்பிப் போ” என்று கூறிவிட்டாள். 68 ஆனால் ரூத்தோ, “நான் திரும்பிப் போகமாட்டேன்” என்றாள். விசுவாசம் வேரூன்றி, உறுதியாக நிலைநாட்டப்பட்டதே! பரிபூரண விசுவாசம் ரூத்தினுடைய இருதயத்திற்குள்ளாக உண்டாயிருந்தது. எனவே அவள், “நான் உன்னோடே செல்லப் போகிறேன்” என்று கூறிவிட்டாள். அவள் இவளைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள். “நீர் எங்கே இருக்கிறீரோ அங்கேயே நானும் இருக்கப் போகிறேன்.” நான் அதை விரும்புகிறேன். 69 நாம் தொடர்ந்து செல்கிற அந்த கதையை நன்கு அறிந்தவர்களாயிருக்கிறோம். அதாவது இந்த மகத்தான போவாஸ் அறுப்புக்கு எஜமானாய் அறுப்பு வேளையில் இருந்தான். அவன் நகோமிக்கு ஒரு உறவின் முறையானாய் இருந்தான். அவன் அங்கே ஒரு சிறு வயலில் ரூத் பொறுக்குகிறதை, ஒவ்வொரு கதிரையும், தானியம் இருந்த ஒவ்வொரு கதிரையும் அவள் பொறுக்கியெடுத்து அவளுடைய ஜீவனத்திற்காக வைத்துக் கொண்டதைக் கண்டான். அப்பொழுது போவாஸ் அறுப்புக்கு எஜமானாயிருந்தபடியால் தன்னுடைய அறுவடையாளர்களை ஒரு கைப்பிடியளவு அவளுக்காக இடையிடையே சிந்திவிடும்படிக்கு கட்டளையிட்டான். அவள் அதை சந்தோஷத்தோடே பொறுக்கிக் கொண்டாள். அவள் அதை அந்நாளில் தட்டி அடித்து ஒரு பெரிய துணி நிறைய கொண்டு சென்றாள். அறுப்புக்கு எஜமானாகிய போவாஸ் வெளியே வந்து ரூத்தை நோக்கிப் பார்த்தபோது அவளுடைய உண்மை நிலையைக் கண்டு அவன் அவளோடு காதல் கொண்டான். 70 போவாஸ் கிறிஸ்துவுக்கு பாவனையாக இருப்பதைக் கவனியுங்கள். அவன் எங்கே இருந்தான்? பெத்லகேம். ரூத். எங்கே வந்தாள்? பெத்லகேமுக்கே. அவள் எங்கே பொறுக்கிக் கொண்டிருந்தாள்? பெத்லகேமில். இங்கே இதற்கான அந்த எல்லா ஆவிக்குரிய முக்கியத்துவங்களையும், சம்பவித்துக் கொண்டிருந்த இந்த மகத்தான பின்னணியையும் பார்த்தீர்களா? தேவன் அதை ஆதியிலே அறிந்திருக்கிறாரே! 71 அவள் தன்னுடைய மாமியிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்கத் துவங்கினாள். முடிவாக ரூத் போவாஸிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். ஒரு புறஜாதி மீண்டுமாக யூதேயாவில் ஒரு பிரபுவை மணந்து கொண்டு அங்கேயே குடியமைத்து பெத்லகேமில் வசித்தாள். “ஓ, சிறிய பெத்லகேமே, நீ பாலஸ்தீனாவின் பட்டணங்கள் எல்லாவற்றிற்குள்ளும் சிறியதல்லவோ? ஆயினும் அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாய் பூர்வத்தினுடையவைகளாயிருக்கிறபடியால், தேவனுக்கு தம்முடைய குமாரன் அங்கே பிறக்க வேண்டியது பிரீதியாயிருந்தது”. 72 அவர் எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறார். அவர் அது சரியாயிருக்கும்படிக்கு கிரியை செய்கிறார். அங்கே ரூத் போவாஸை மணந்து கொண்டாள். ரூத்தும் போவாசும் மணந்து கொண்டபோது…அந்த மகத்தான கதைக்குள்ளாகச் செல்ல நமக்கு நேரம் இருக்குமானால் நலமாயிருக்கும். ரூத்தும் போவாசும் மணந்து கொண்டது எல்லா காலங்களிலும் உள்ள காதல் காட்சிகளைக் காட்டிலும் மிகவும் மகத்தான ஒன்றாயிருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம் இங்கே ஒரு நிமிடம் அப்படியே நிறுத்துவோமாக. ஏனெனில் அது கடந்து செல்ல முடியாதபடிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கிறதே! 73 ரூத் ஒரு புறஜாதியாயிருந்தாள். புறஜாதிகளாகிய நமக்கு எந்த சுதந்திரமும் இல்லாதிருப்பது போலவே அவளுக்கு யூதனோடு சுதந்திரமே இல்லாதிருந்தது. ஆகையால் நகோமி அதை உண்மையாகவே சுதந்தரிக்க வேண்டிய ஒருவளாயிருந்தாள். எனவே அவள் முதலில் தனக்கிருந்த நிலச்சொத்து எல்லாவற்றையும் இழந்து விட்டிருந்தாள். அவளுடைய பொருட்கள் யாவுமே பொது ஏலத்தில் விற்கப்பட்டிருந்தன. ஆகையால் அவளும் விலக்கி வைக்கப்பட்டு தூரமாய் போய்விட்டிருந்தாள். 74 இப்பொழுது அவள் திரும்பி வந்தபோது, அங்கே இழந்துபோன அவளுடைய சுதந்திரவீதத்தை மீட்கக்கூடிய ஒரு நபர் இருந்தான். அவன் அவளுக்கு நெருங்கின ஒரு இனத்தானாயிருந்தான். போவாசும் இதை அறிந்திருந்தான். எனவே அவன் இந்த புறஜாதி பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள சில வழிகளை கையாள வேண்டியதாயிருந்தது. அவன் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது? அவன் இந்த நிலச்சொத்தைப் பெற நகோமியின் எல்லா நிலங்களையும் வாங்கிக் கொள்ள வேண்டியவனாயிருந்தான். ஏனெனில் ரூத் நகோமியின் சொத்திற்கு பாகமாயிருந்தாள். அதை வாங்கக்கூடிய மனிதன் அந்த சுற்றத்தார்களில் நெருங்கின இனத்தானாய் இருக்கக் கூடிய ஒரு நபராய் மாத்திரமே இருக்க வேண்டும். அதுவே மீட்பின் பிரமாணமாயிருந்தது. 75 பின்வாங்கிப்போன இஸ்ரவேலரின் நிலத்தை கிறிஸ்துவானவர் வாங்க முடிந்த ஒரே வழி ஒரு இனத்தானாக வேண்டியதாயிருந்தது. மானிட வர்க்கத்தை மீட்கக்கூடிய ஒரே வழி தேவன் தாமே மாம்சமாக வேண்டிதாயிற்று. இயேசு மானிட வர்க்கத்திற்கு தேவன் உண்டாக்கின இரத்த சம்பந்தமான உறவு முறையாயிருந்தார். அவர் இம்மானுவேலாய் இருந்தார். அவர் இரத்த சம்பந்தமான உறவுமுறையானார். அவர் தனக்கு தூதர்களின் ரூபத்தை எடுத்துக் கொள்ளாமல், பாதங்களை கழுவுகிற ஒரு அடிமையின் ரூபத்தில் ஜீவித்தார். நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் இருந்தன. ஆனால் அவருக்கோ தம்முடைய தலையை சாய்க்க இடமில்லாதிருந்தது. அவர் மற்ற மனுஷர்களைப் போலவே புசித்தார், குடித்தார். அவர் அழுதார், அவர் சிரித்தார், ஆனால் அவர் தேவனாயிருந்தாரேயன்றி, ஒரு தீர்க்கதரிசியாயிருக்கவில்லை. அவர் தேவனாயிருந்தார். ஏனென்றால் அவர் இழந்துபோன மானிட வர்க்கத்தை மீட்கும்படியான இரத்த சம்பந்தமான உறவுமுறையானாக வேண்டியதாயிருந்தது. ஆகையால் இந்த மகத்தான மாதிரியில் போவாஸ் பெத்லகேமில் இருந்தான். மானிட வர்க்கத்திற்கு இனத்தானாக வேண்டியவர் எங்கே பிறந்தார் என்பதைப் பாருங்கள். 76 அதன்பின்னர் இந்த மகத்தான போவாஸ் மீட்டபோது, அவள் இழந்துபோன அவளுடைய எல்லா நிலங்களையும் மீட்டு விட்டான் என்று அவன் வெளிப்படையாக காட்ட வேண்டியவனாயிருந்தான். எனவே அவன் பெத்லகேமின் வாசலண்டை, அந்த சிறு பட்டணத்திற்கு மீண்டும் சென்று, பட்டணத்தின் மூப்பர்களை அழைத்து, நகோமி இழந்துவிட்டிருந்த ஒவ்வொன்றையும் அவன் அந்நாளில் வாங்கிவிட்டான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்தான். அவள் இழந்த ஒவ்வொன்றையும் அவன் திரும்ப பெற்றுக் கொண்டான். எனவே அவன் தன்னுடைய பாதரட்சைகளை ஜனங்களுக்கு முன்பாக ஒரு அடையாளமாக கழற்றிப் போட்டான். “எவரேனும் ஏதாவது காரியத்தை கூறவேண்டியிருந்தால் அதை இப்பொழுது கூறுங்கள். ஏனென்றால் அவள் இழந்த ஒவ்வொன்றையும் நான் மீட்டிருக்கிறேன் என்பதற்கு இது ஒரு ஞாபகச் சின்னமாயுள்ளது”. 77 ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! நம்முடைய இனத்தான், நசரேயனாகிய இயேசு வந்தபோது பெத்லகேமில் பிறந்தார். அவர் கொல்கதாவின் உச்சியில் நின்று, மானிடவர்க்கம் வீழ்ச்சியில் இழந்துவிட்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் மீட்டுவிட்டிருந்தார் என்பதற்கு ஒரு ஞாபகச் சின்னமாக அவர் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே உயர்த்தப்பட்டார். அதாவது, “நான் முழு மானிடவர்க்கத்தையும் அவர்கள் இழந்துபோயிருந்த ஒவ்வொரு காரியத்தையும் மீட்டிருக்கிறேன்” என்ற ஒரு அடையாளம் வெளிப்படையாக கல்வாரியில் உண்டுபண்ணப்பட்டிருக்கும்போது மனிதர்கள் எப்படி தெய்வீக சுகமளித்தலையும், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமைகளையும் இகழமுடியும்? நம்முடைய ஆத்துமா மீட்கப்பட்டது, நம்முடைய சரீரம் மீட்கப்பட்டது. நாம் வீழ்ச்சியில் இழந்துவிட்டிருந்த ஒவ்வொரு காரியமும் மீட்கப்பட்டு விட்டது. நம்முடைய இனத்தான் மீட்பர் வந்து மாம்சமாகி நமக்கு மத்தியிலே வாசம்பண்ணி, அடையாளச் சின்னத்தை தெரியப்படுத்தி, “முடிந்துவிட்டது” என்று கூறினார். எது முடிந்து விட்டது? ஒவ்வொரு காரியமும் முடிந்து விட்டது. நாம் நம்முடைய சுதந்திரத்திற்குள்ளாக அப்படியே நடந்து கொண்டிருக்கிறோம். நாட்கள் செல்ல செல்ல நாம் இன்னும் நெருக்கமாக நடந்து கொண்டிருக்கிறோம். 78 போவாசும், நகோமியும்…திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச காலத்தில் அவர்கள் ஒரு குமாரனை பெற்றெடுத்தனர். அது வம்ச வரலாற்றில் சேர்க்கப்பட்டது. அது ஓபேத் ஆகும். அவனும்கூட ஒரு குமாரனைப் பெற்றெடுத்தான். அது ஈசாய் ஆகும். ஈசாய் எட்டு பையன்களை உடையவனாயிருந்தான். 79 மகத்தான தீர்க்கதரிசி சாமுவேல் எண்ணெய் கலசத்தோடு வந்து, அந்த மகத்தான தீர்க்கதரிசியானவன் ஈசாயினிடம் சென்று, “என் ஜனங்களை ஆளுகை செய்யவும், சேவிக்கவும் உன்னுடைய குமாரர்களில் ஒருவனை தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார்” என்றான். வயல்வெளியின் பின்பக்கத்தில் இருந்த ஒரு சிறு மேய்ப்பனுடைய முற்றத்தில் அங்கே ஒரு சிறிய சிவந்த, மெல்லிய தோற்றத்தில் காணப்படுகின்ற, எல்லோருக்கும் இளையவனான தாவீது எனும் ஒரு பையன் கொண்டுவரப்பட்டான். சாமுவேல் அவனை அவனுடைய எல்லா சகோதரர்களின் முன்னிலையிலும் நிறுத்தி, அவன் மேல் அபிஷேகத் தைலத்தை ஊற்றி, தேவன் அவனை இராஜாவாக அபிஷேகித்திருந்தார் என்று நிரூபித்தான். அது எங்கே நடந்தது? பெத்லகேம். உன்னதத்தில் உள்ள தேவனுக்கு மகிமை! அவன் பெத்லகேமில் அபிஷேகிக்கப்பட்ட இராஜாவாக இருந்தான் என்பதில் வியப்பொன்றுமில்லை. 80 தாவீது பிறந்திருந்தது பெத்லகேமாயிருந்தது. எனவே அவனுடைய மகத்தான குமாரன் இயேசுவும்கூட பெத்லகேமில் பிறக்க வேண்டிதாயிருந்தது, ஏனென்றால் அவர்கள் இருவருக்குமிடையே தன்னுடைய தந்தை குமாரன் என்ற ஒரு நெருங்கிய பிணைப்பு உள்ளது. இந்த மகத்தான குமாரன் குமாரனாய் மாத்திரமல்லாமல், அவர் தாவீதின் வேரும், சந்ததியுமாயிருந்தார். அவர் தாவீதுவிற்கு முன்பே இருந்தார். அவர் தாவீதிற்கு பின்னரும் இருப்பார். அவர் அநாதியாய் என்றென்றைக்கும் இருப்பார். ஆனால் மாம்சத்தின்படியோ எல்லா காரியங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். அவர் தாவீதின் குமாரனாய் இருந்தார். அவர் அநேக வருடங்கள் கழித்து, இந்த பெத்லகேமில், இந்த மறக்கப்பட்ட சிறு பட்டணத்தில் பிறக்க வேண்டியவராயிருந்தார். 81 ஆனால் அங்கே எல்லா நேரங்களிலும், நீங்கள் கவனிக்கிறீர்களா? அங்கே ஒரு மகத்தான, எவருமே புரிந்து கொள்ள முடியாததுபோன்று தென்படுகிற வல்லமையான இரகசியம் கிரியை செய்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு தேவனுடைய பெத்லகேமிலும் அதே காரியமாகத்தான் அது உள்ளது. அங்கே எவருமே புரிந்து கொள்ளாதபடிக்கு தென்படுகிற ஒரு இரகசிய அடையாளம் கிரியை செய்துகொண்டிருக்கிறது. அது ஜனங்களின் சிந்தைக்கெட்டாமல் கடந்து செல்கிற ஒரு காரியமாய் உள்ளது. அவர்களுக்கு அது புரிந்து கொள்ளும்படியாக தென்படுகிறதில்லை, என்ன செய்யப்பட்டிருந்தாலும் அல்லது என்ன கூறப்பட்டிருந்தாலும் கவலைப்படுகிறதில்லை. ஜனங்கள் செய்யப்பட்டிருக்கின்ற இரகசியமான காரியங்களின் பாகத்தை நோக்கிப் பார்த்து, “ஓ, நல்லது, அது முழுவதும் சரியாயிருக்கிறது” என்று நான் யூகிக்கிறேன் என்று கூறி தொடர்ந்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை புரிந்து கொள்கிறதில்லை. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் அதை கிரகித்துக்கொள்ள முடியாது. அதைத்தான் தேவன் யூதேயாவில் உள்ள பெத்லகேமில் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு மகத்தான தலையண்டை வரும்படிக்கே இந்த எல்லா சிறு காரியங்களையும் முன்னோக்கி செயல்பட செய்து கொண்டிருக்கிறார். 82 தாவீது, ஓ, அவன் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோது, ஒரு—ஒரு சிறு பையனாக, அவன் சிவந்த மேனியுடையவனாக காணப்பட்டான். ஆனால் உண்மையாகவே தேவனை நோக்கிப் பார்க்கும்படி அவனுக்குள் ஏதோ ஒரு காரியம் இருந்திருக்க வேண்டும். மிகச் சிறிய குடும்பத்தில் இருந்த ஒரு சிறு பொடியன். மற்ற பையன்களோ மகத்தான அருமையான பெரிய புருஷர்களாயும், தங்களுடைய ஆடைகளுக்கு பொருத்தமாகவும், தங்களுடைய தலைக்கு ஓர் கிரீடம் பொருத்தமாயிருப்பது போன்றும் காணப்பட்டனர். ஆனால் தேவனோ எதை பார்க்கிறார் என்பதை காண்பித்தார்; வெளிப்புற தோற்றத்தையல்ல, ஒரு மனிதனின் உட்புறத்தையே நோக்கி பார்க்கிறார். அவர் அவனுடைய இருதயத்தை நோக்கிப் பார்க்கிறார். அவர் தாவீதுவினுடைய இருதயத்திற்குள் என்ன இருந்தது என்பதை அறிந்திருந்தார். அவனுக்கு கிரீடம் எப்படி காணப்பட்டது என்று கவலைப்படவில்லை. அவர் தன்னுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனை தேடிக்கொண்டிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். தாவீது அவருடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற மனிதனாயிருந்தான். அந்த காரணத்தினால்தான் அவன் அபிஷேகத் தைலத்தை ஊற்றி இல்லை அதை தாவீதின் மேல் ஊற்றினான். தாவீது என்பதற்கு “அன்புக்குரியவன்” என்று பொருளாகிறது. 83 அது அநேக வருடங்களுக்கு பின்னர் வந்த அன்புக்குரிய ஒருவரான இயேசுவுக்கு மாதிரியாய் அமைந்திருந்தது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த எல்லா காரியங்களையும் நிறைவேற்றும்படிக்கே தாவீதின் குமாரன் வந்தார். இந்த சிறு பெத்லகேம் பட்டணத்திலே இது சம்பவித்திருந்தது. தாவீது தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அதே சிறிய யூதேயா மலையிலேயே அநேக வருடங்கள் கழித்து தூதர்கள் தங்களுடைய முதல் கிறிஸ்துமஸ் கீதத்தை பெத்லகேமை எதிர்நோக்கியிருந்த அதே யூதேயா மலையின் மீதே பாடினார்கள். அந்த முதல் கிறிஸ்துமஸ் கீதமானது, “உங்களுக்கு தாவீதின் பட்டணத்தில் கர்த்தராகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார்” என்றிருந்தது. தூதர்கள் பாடும்படி முதலில் தோன்றினது எருசலேமில் அல்ல, பெரிய சபையில் அல்ல, அல்லது அது கில்காலில் அல்ல, அல்லது அது சீலோவில் அல்ல, ஆயினும் அவர்கள் எல்லா நேரங்களிலும், பக்தியான ஸ்தாபன ஆராதனையை உடையவர்களாகவே இருந்து வந்தனர். ஆனால் அதுவோ சிறு பெத்லகேமில் நடந்தது. அங்கேதான் தேவனுடைய ஆவியானவர் ஏதோ ஒன்றை வெளிப்படுத்த ஒரு இரகசியமான முறையில் அசைவாடிக் கொண்டிருந்தார். அது அங்கே இருந்தது. 84 அங்கேதான் கிறிஸ்துவானவர் வரவேண்டியதாயிருந்தது. அது அங்கேயே நடந்தது. கன்னியான ஒரு தாய் தன்னுடைய முதற்பேறான குமாரனை பிறப்பித்தும், ஒரு இராஜா பிறந்ததும், சரியாக அதே சிறு பட்டணமாகவே இருந்தது. அது புகலிடமாக்கப்பட்ட அதினுடைய சிறு கோட்டையில் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமானவருடைய வீட்டைக் கொண்டிருந்தது. அங்கே சாமுவேல் மாத்திரம் அபிஷேக தைலத்தை ஊற்றவில்லை, ஆனால் தேவன் அவர் மேலும், உலகத்தின் மேலும், கர்த்தராகிய கிறிஸ்துவின் மேலும் ஊற்றினார். தூதர்கள் அவருடைய வருகையை அறிவித்து, அநேக ஆண்டுகளுக்கு முன்னர் தாவீது இருந்த அதே மலையின் மீது இருந்த மேய்ப்பர்களுக்கு பாடலைப் பாடினர். தேவனுடைய இரகசியத்தையும், அது எவ்வளவு மகத்துவமானதாயிருக்கிறது என்பதையும் பார்த்தீர்களா? 85 ஜீவிப்பதற்கு முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்த கோதுமை விளைகின்ற, மகத்தான கோதுமை பயிர் விளைகின்ற இடத்தில் அவர் பிறந்தார். அவர் ஜீவ அப்பமாயிருந்தார். “நானே ஜீவ அப்பம், என் மாம்சத்தை புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஒருபோதும் மரிப்பதில்லை, அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்”. 86 பெத்லகேம். பெத்—ஏல், எனும் பெயர், பெ—த், பெத், பெத் என்ற எபிரேய வார்த்தை “வீடு” என்று பொருள்படுகிறது. ஏல்—ல் என்பது ஏலோஹீம் என்பதாக காணப்படுகிறது. அதினுடைய சுருக்கெழுத்தாகும். ஏலோஹீம் என்பது “தேவன்” என்று பொருள்படுகிறது. பெ—த், பெத்; ஏ—ல், ஏ—ல் என்பது ஏலோஹீம் என்பதாகும். அது தேவனாகும். தேவனுடைய வீடு, அங்கே தான் ஜீவ அப்பம் வைக்கப்பட்டிருக்கிறது. ஏ—ல், கே—ம், அது அதினோடு முடிவடைகிறது. உங்களுடைய ல—கேம் என்ற எபிரேய வார்த்தையானது ஒரு “துண்டு அப்பம்” என்றே பொருள்படுகிறது. ஏ—ல் என்பது தேவன், ஏலோஹீம் ஆகும். பெ—த் என்பது அப்பமாகும். இல்லை பெ—த்…என்பது…பெ—த் என்பது வீடாகும். ஏ—ல் என்பது ஏலோஹீம் என்பதின் சுருக்கெழுத்தாகும். அப்படியானால் ல—கே—ம் என்பது அப்பமாகும். அவர் என்னவாயிருந்தார்? தேவனுடைய அப்பத்தின் வீடு. “தேவனுடைய அப்பத்தின் வீடு”. வீடு, பெத்; ஏலோஹீம், தேவன்; ல—கே—ம், அப்பம். “தேவனுடைய அப்பத்தின் வீடு” என்பதே பெத்லகேம் என்பதற்கு பொருளாகிறது. 87 அவர் அந்த இடத்தில் பிறக்காமல் வேறெந்த இடத்திலாவது பிறக்க முடியுமா? ஆனால் அது அந்த தீர்க்கதரிசியைத் தவிர மற்ற எல்லோருக்கும் மறைக்கப்பட்டிருந்தது. எனவே அவர், “பெத்லகேமிலிருந்தே அவர் வருவார்” என்றார். அவர்களோ எருசலேமிலே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரிய சீலோவிலே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர், அவர்கள் எல்லாவிடங்களிலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவரோ பெத்லகேமிலிருந்தே வந்தார். ஏனென்றால் அது தேவனுடைய ஜீவ அப்பத்தின் வீடாயிருந்தது. அவர் உலகத்திற்கு தேவனுடைய அப்பத்தின் கூடையாயிருந்தார். அதினால்தான் அவர் அங்கே பெத்லகேமிலே பிறந்தார். எனவே அவர் வேறெங்கும் பிறந்திருக்க முடியாது. 88 நான் இந்த வாரம் அவர் ஏன் பெத்லகேமில் பிறக்க வேண்டியதாயிருந்தது என்பதற்காக பல வித்தியாசமான ஆவிக்குரிய நோக்கங்களில் ஆய்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு இன்னும் அநேக மகத்தான காரியங்கள் இருக்கக் கூடியதாயிருந்தது. நான் இந்த ஒரு சில இடங்களை கண்டபோது, பரிசுத்த ஆவியானவர் என்னை அப்படியே பற்றி புரிந்து கொள்ளச் செய்தார். அப்பொழுது நான், “ஓ, தேவனே அதுவே போதுமானதாயிருக்கிறது. நான் அதை இப்பொழுதே புரிந்து கொள்கிறேன்” என்றேன். 89 அவர் பெத்லகேமைத் தவிர வேறெங்கும் பிறந்திருக்க முடியாது. அது தேசத்தின் அப்ப ஸ்தலமாக இருந்தது. இஸ்ரவேல் வீட்ட்டார் யாவருக்கும் அங்கிருந்தே அப்பம் வருகிறதாயிருந்தது. அவர் பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பமாய், ஆவிக்குரிய மன்னாவாய் இருந்தபடியால், அப்ப வரிசையில் பார்க்கும்போது, அங்கேதான் அப்பம் இருக்கிறது. எனவே பெத்லகேமிருந்து வரவேண்டியவராயிருந்தார். பெத்லகேமில் அப்பம் சுடப்பட்டது. இப்பொழுது இயேசுவானவர் ஜீவ அப்பமாய் இருக்கிறபடியால், “இந்த அப்பத்தை புசிக்கிறவன் ஒருக்காலும் மரிப்பதில்லை” என்றார். 90 மற்றொரு மகத்தான சம்பவத்தை என்னால் கூறாமல் மறக்க இயலாது. அதாவது தாவீது தன்னுடைய இக்கட்டான நேரத்தில் இருந்தான். அதாவது அவன் தப்பி ஓடிப்போனவனாயிருந்தான். ஆனால் அவன் ஏற்கனவே அபிஷேகிக்கப்பட்டிருந்தான். அவன் என்னவாயிருக்க வேண்டியவனாயிருந்தான் என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவன் இராஜாவாயிருக்க வேண்டியவனாயிருந்தான். தேவன் அவ்வண்ணமாய் கூறியிருந்தார். அதே சமயத்தில் அவன் வெறுக்கப்பட்டான். எனவே அவன் இரண்டு பெரிய கடும் சிக்கலான சூழ்நிலைகளுக்கிடையே நின்று கொண்டிருந்தான். இதோ பெலிஸ்தர்கள் ஒருபக்கம் அவனை பின்தொடர்ந்தனர்; மற்றொரு பக்கம் இதோ சவுலும் இருந்தான். அவன் ஒரு தேசாந்திரியான மனிதனாயிருந்தான். 91 இன்றைக்கு சபையானது அந்த விதமாகத்தான் நிற்கிறது. ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபை ஒரு ஸ்தாபனமின்றி, இல்லை, எந்த காரியமுமின்றியே நிற்கிறது. அவள் தனியாக நிற்கிறாள். ஆனால் அதே சமயத்தில் அவள் தன் மேல் ஊற்றப்பட்டிருக்கிற அபிஷேகத்தை உடையவளாயிருக்கிறாள். அவள் என்னவாயிருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். 92 எப்படித்தான் பிசாசு இரு பக்கங்களிலும் தாவீதை துரத்தினபோதிலும் இந்த உலகத்தில் அவனுக்கு ஏதாவது சம்பவிக்க முடிந்ததா? அவன் தன்னைப் போன்று விசுவாசிக்கின்ற ஒரு சிறுகூட்ட விசுவாசமுள்ள போர்வீரர்களோடு மறைவிடத்தை கண்டறிய முயற்சித்து குகைகளிலும், வனாந்திரங்களிலும், அரணான இடங்களிலும் அடைக்கலமான இடத்தை தெரிந்து கொண்டான். ஆனால் அந்த மனிதர்களோ தேவனையும், அவன் இராஜாவாய் இருப்பான் என்பதையும் விசுவாசித்தனர். 93 ஆகையால் இன்றைக்கு விசுவாசிகளும் அவ்வாறே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று பாதுகாவலாக மறைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இராஜாவாயிருக்கும்படி வரப்போகிறவரை அவர்கள் அறிந்துள்ளனர். ஜனாதிபதியாய் இருக்கப் போகிறது யார் என்று நான் கவலைப்படுகிறதில்லை. அவர் வரப்போகிறார் என்பதை நாம் அறிவோம். அது அதிக நாட்கள் கழித்தே சம்பவிக்கப் போகிறதைப் போன்று காணப்படுகிறது. ஏனென்றால் விஞ்ஞானமானது அடக்கியாள முயற்சித்துக் கொண்டு, “அவர்களால் ஒரு மனிதனை உருவாக்க முடியும். அவர்களால் இதை செய்யமுடியும், அவர்களால் ஒரு முயலை எடுத்து, அந்த முயலிலிருந்து ஒரு கருவுறச்செய்யும் உயிரணுவை எடுத்து மற்றொரு முயலை உருவாக்க முடியும்” என்று கூறி தேவனுடைய வார்த்தையை தவறென்று நிரூபிக்க முயற்சிக்கிறது. ஆயினும் அதே சமயத்தில் தேவனை விசுவாசிக்கிற ஜனங்கள் உண்டு. அவர்கள் எப்போதும் செய்தது போலவே இப்போதும் அவ்வளவு ஆதரவாக அப்படியே நிற்கிறார்கள். என்ன வந்தாலும் அல்லது என்ன போனாலும் கவலைப்படாமல் அவர்கள் இன்னமும் தேவனையே விசுவாசிக்கிறார்கள். தேவன் சரியாயிருக்கிறார். அவர்கள் தேவனுடைய மாறாத கரங்களை பற்றிக் கொண்டிருக்கிறார்கள். யுத்தத்தின் மத்தியிலும், கண்ணீரின் மத்தியிலும், சுகவீனம் மற்றும் மரணம் இன்னும் ஒவ்வொரு காரியத்திற்கும் மத்தியிலும் அவர்கள் இன்னமும் அப்படியே தேவனுடைய மாறாத கரத்தையே பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் இராஜாவாக வரப்போகிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 94 ஜனங்களோ, இன்றைக்கு அவர்களைக் குறித்து நகைத்து, பரிகசித்து அவர்களை, “பரிசுத்த உருளைகள்” என்று அழைத்து, இன்னும் அவர்கள் அழைக்க விரும்புகிற காரியத்தினாலும் அவர்களை அழைக்கிறார்கள். ஆனால் அந்த தேவனுடைய வீரர்களோ கடமையின் பாதையில் உண்மையுள்ளவர்களாகவே நிற்கின்றனர். அவர்களை ஒரு “சுகமளிக்கும் குழுவினர்” என்று அழைக்கலாம், நீங்கள் அவர்களை ஒரு “கூட்ட மூட மதாபிமானிகள்” என்றழைக்கலாம் அல்லது நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் அழைக்கக்கூடும். ஆனால் அவர்களோ அந்த இராஜாவையே பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர் வல்லமையோடு வரப்போகிறார் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் அவருடைய நாமத்தை வீணிலே வழங்கும்படி எடுத்துக் கொண்டு, பரிகரித்து, எள்ளி நகைத்து, அவரை விசுவாசிக்கும் ஜனங்களை, “இழிவானவர்கள், பின்னோக்கி அடித்துச் செல்லும் அலையைப் போன்ற கூட்டத்தார்” என்றழைத்தாலும் அது அவர்களை ஒரு அணு அளவும் பாதிப்பதில்லை. அவர்களோ கடமையின் பாதையில் உண்மையாய் தரித்திருக்கிறார்கள். 95 தாவீதோடிருந்த அந்த வீரர்கள் அவனருகில் உண்மையாய் தரித்திருந்தனர். ஒரு பெலிஸ்தியன் வருவானேயானால் அவன் சண்டையிட வேண்டியதாயிருந்தது. அவர்கள் யாராயிருந்தாலும் ஒவ்வொரு பக்கத்திலும் முறியடிக்கப்பட்டனர். பரிதாபமான தாவீது தன்னுடைய சிந்தையில் முற்றிலும் குழப்பமடைந்து, அவன் “கர்த்தாவே, இது எப்படி இருக்க முடியும்?” என்று எண்ணினான். 96 தலைவர்கள் சில நேரங்களில் சில காரியங்களினூடாக சிந்திக்கையில் சபையோர் அவர்கள் எதனை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் தேவன் உண்டுபண்ணியிருக்கிற வாக்குத்தத்தங்களைக் குறித்து நீங்கள் நினைக்கும்போது, அப்படியானால் அது ஏன் நிறைவேறவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர்கள் அதை அவர்களுடைய சபையாருக்கு சொல்கிறதில்லை. அவர்கள் அதை தங்களோடு கூட்டாளிகளாயுள்ள ஜனங்களிடத்திலும் சொல்கிறதில்லை. ஆனால் ஒரு உண்மையான தலைவனின் இருதயத்தில் அநேக கலக்கங்கள் உண்டு. 97 தாவீது அங்கே அமர்ந்து கொண்டிருக்கையில் அவனுடைய—அவனுடைய தொண்டை வறண்டு கொண்டிருந்தது. அது கோடை காலத்தின் மையப்பகுதியாயிருந்தது. தாவீதிற்கும் சவுலுக்குமிடையே இருந்த அந்த பிளவை பெலிஸ்தியர்கள் சாதகமாக எடுத்துக் கொண்டிருந்தனர். சவுல் தாவீதுவையே எங்கும் தேடிக்கொண்டு இருந்தான். பெலிஸ்தியர்களும்கூட, பெலிஸ்தியர்கள் அப்பொழுது இஸ்ரவேலரை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். ஒரு குழப்பமான நேரத்தைக் குறித்து பேசுகிறோமா? அது ஏறக்குறைய இப்பொழுதும் அவ்வாறே உள்ளது. தாவீது இந்த சிறு இடத்தில் அடைக்கலம் கொண்டிருந்தான், இந்த சிறு புகலிடத்தில் இருந்தான், எங்கெல்லாம் அவனால் தஞ்சம் புகமுடிந்ததோ அங்கெல்லாம் தஞ்சம் கொண்டான். அதன் பின்னர் அவன் மலையின் மீது சென்றபோது அந்த உஷ்ணமான கோடை காலத்தின் மத்தியில், உஷ்ணம் மிகவும் அதிகமாயிருந்தபடியால் அவனுடைய தொண்டை ஒருபுறம் வறண்டு கொண்டிருக்க, மறுபுறம் குழப்பங்களும், பயங்களும் அவனுடைய இருதயத்தில் இருக்க, விசனத்தில் ஆழ்ந்திருந்தான். எனவே அவன், “ஓ தேவனே, இது எப்படி சம்பவிக்க முடியும்? நீர் என் மீது எண்ணெயை வார்த்தீரே, நானாகவே தெரிந்து கொள்ள வில்லையே. நீரே என்னைத் தெரிந்து கொண்டீர். நீர் ஏன் என்னை தூரமாய் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து அழைத்து, உன்னுடைய ஜனங்களை சேவிக்கும்படிக்கு நான் உனக்கு இதை கொடுக்கிறேன் என்று என்னிடத்தில் கூறி, என்னை இங்குமங்கும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கிடையே பிடித்து வைத்திருக்கிறீர்?” என்று கேட்டான். அந்த எண்ணமே அவனுடைய இருதயத்தினூடாக எழும்பிக் கொண்டிருந்தது. 98 அவன் குன்றின் மீது அமர்ந்து கீழ்நோக்கிப் பார்த்தான். பெத்லகேமில் இருந்த தன்னுடைய சிறிய வீட்டிற்கு பெலிஸ்தியரின் தாணையம் வந்து முற்றுகையிட்டிருந்தது. அப்பொழுது அவனுடைய சிறிய பட்டணமும் சத்துருவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அது மட்டுமின்றி, தன்னுடைய சொந்த தகப்பனாருடைய வீடும், ஈசாயினுடைய வீடும் பெலிஸ்தரண்டை அடிமைத்தனத்தின் கீழே இருந்தது. அவனுடைய சொந்த தேசம், அவனுடைய சொந்த சபை அவனுக்கு விரோதமாக இருந்தது. இதோ சத்துருவினிடத்தில் அவன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இதோ சபை ஜனங்களிடத்தில் அவன் சண்டையிட்டுக்கொண்டிருந்தான். அவன் அதை செய்ய வேண்டும் என்று விரும்பின காரணத்தினால் அல்ல, ஆனால் அவன் அதை செய்யும்படி பலவந்தம் பண்ணப்பட்ட காரணத்தினாலே அதைச் செய்தான். 99 அநேக சமயங்களில் நாம் சில காரியங்களை செய்யும்படி, நாம் கூற விரும்பாத காரியங்களை கூறும்படிக்கு பலவந்தம் பண்ணப்படுகிறோம், ஒரு உண்மையான ஆவிக்குரிய தலைவன், ஆனால் அவன் அதை செய்யும்படி பலவந்தம் பண்ணப்படுகிறான். அப்பொழுது அவன் தன்னுடைய புயபலத்தை தெரிந்து கொண்டு, தன்னுடைய சாயலை காண்பிக்க வேண்டியவனாயிருக்கிறான். பாடல் எழுத்தாளனும், “நான் கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியையே தெரிந்து கொள்வேன்” என்று கூறினான். 100 ஆகையால் அந்த உஷ்ணமான நாளிலே அவன் முன்னும் பின்னும் நடந்துகொண்டே, சுமார் இருபத்தைந்து மைல்கள் தூரத்தில் அங்கே இருந்த அந்த நீண்ட பள்ளத்தாக்கினூடாக நோக்கிப் பார்த்தான் என்பதில் சந்தேகமேயில்லை. அங்கே இருந்த தன்னுடைய சொந்த தகப்பனாருடைய வீடும் பெலிஸ்தரண்டையிலே அடிமைத்தனத்தில் இருந்தது. அங்கே சவுல் அதற்கு அப்பால் இருந்தான்…இதோ இந்த ஒருவன் வருகிறான், இதற்கிடையே அமர்ந்து கொண்டு, இரண்டு பக்கங்களையும் காணவேண்டியதாயிருந்தது. இந்த பெரிதான நேரத்தில் இஸ்ரவேலர் யாவரும் சிதறுண்டு போயினர் என்பதை காணும்போது, சபையும் பல்வேறு ஸ்தாபனங்களுக்குள்ளாக சிதறுண்டு போயிற்று என்றே கூறவேண்டியதாயிருக்கிறது. இதோ இங்கே தாவீது பின்னாலே நின்றுகொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தாலும், அதே சமயத்தில் தன் மீது அபிஷேகம் தங்கியிருப்பதை அறிந்திருந்தான். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] அந்த அபிஷேகம் அங்கிருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். தாவீது இராஜாவாக இருக்கப்போகிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அல்லேலூயா! 101 யார் இராஜாவாக இருக்கப் போகிறது என்பதை நாம் அறிவோம். யார் ஜனாதிபதியாக இருக்கப் போகிறது என்பதைக் குறித்து கவலைப்படுகிறதில்லை. யார் இராஜாவாக இருக்கப் போகிறது என்பதை நான் அறிவேன். அவர் இராஜாவாயிருப்பார். எனவே அதற்காக நிற்பதற்கு அது ஏதோ ஒரு காரியத்தை எடுத்துக் கொள்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் தேவனே ஸ்தாபனங்களுக்கும், மற்ற காரியங்களுக்கும் என்னுடைய கண்களை மூடும்படி எனக்கு உதவிசெய்யும். அவர் இராஜாவாக வரப்போகிறார் என்பதை தொலைவில் இருந்தே அந்த ஆவிக்குரிய பார்வையினூடாக காண்பேனாக. நான் அவரை சேவிப்பேன். அது மரணமாயிருந்தால் நான் மரிக்கட்டும். அது என்னுடைய குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும், அது எனக்கு பிரியமானவர்களை எடுத்துக் கொண்டாலும், அது என்னுடைய ஸ்தாபனத்தையே எடுத்துக் கொண்டாலும் அது ஒவ்வொரு காரியத்தையும் எடுத்துக்கொண்டாலும் நான் அவரையே சேவிப்பேனாக. நான் அவரண்டையே தரித்திருப்பேன். அதுதான் தேவனுடைய போர்வீரர்களாகும். இவ்விதமாகத்தான் தாவீதோடிருந்தனர். அவர்கள் எந்த நேரத்திலும் தங்களுடைய கரங்களை பட்டயத்தின் மேல் வைத்தவாறே நடந்து கொண்டிருந்தனர். அந்தவிதமாகவே தேவனுடைய போர் வீரர்களும் நடந்து கொண்டு ஆயத்தமாயுள்ளனர். 102 சத்துருவோ, “நீ கலந்து உறவாடும்படி சற்று குடிக்க வேண்டும்” என்கிறான். 103 “நான் உன்னுடைய அசுத்தமான காரியங்களை தொடமாட்டேன்”. ஆமென். அங்கேதான் சத்துரு இருக்கிறான். அதோ அதற்கான போர்வீரன். 104 “நீ விசுவாசிக்கிற அந்த பண்டைய பரிசுத்த உருளையின் காரியத்தை விட்டுவிடமாட்டாயா?” 105 “நான் தேவனை விசுவாசிப்பேன். நான் உண்மையாய் நிற்பேன்”. அங்குதான் காரியம். அதுதான் போர்வீரர்கள். “ஓ, நீ பொருட்படுத்துவது…தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது”. “அதைத்தான் நீ நினைக்கிறாய். நான் மேலானதை அறிவேன்”. புரிகின்றதா? 106 “பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அந்த நாட்கள் கடந்து போய்விட்டன.” 107 “அதைத்தான் நீங்கள் நினைக்கிறீர்கள். நான் அதை ஏற்கனவே பெற்றிருக்கிறேன். நீங்கள் அதைக் குறித்த எதையும் என்னிடம் கூற மிகவும் தாமதமாயுள்ளீர்கள்.” 108 அவர்களோ காண்பதற்கு சிவந்த மேனியையுடைய அந்த சிறு நபரின் மீது அபிஷேகம் இருந்ததை அறிந்திருந்தனர். அவன் இராஜாவாக இருக்கப்போகிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 109 ஆனால் தாவீது தன்னுடைய சொந்த சிந்தையில் குழப்பமுற்றிருந்தான். அதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நாம் ஒரு நிமிடம் அவனை கவனித்துப் பார்ப்போமாக. அங்கே பின்னுக்கு திரும்பி அமருகிறான். பின்னர் அங்கே கீழ்நோக்கிப் பார்த்து, “பெத்லகேம், என்னுடைய பிரியமான சொந்த பட்டணம், அங்கே இருக்கிற அதை நோக்கிப் பார்க்கிறேன். அங்கே தேவனுடைய மகத்தான காரியங்கள் சம்பவித்திருக்கின்றன. அங்கே என்னுடைய முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் பிறந்தார். அங்கேயே என்னுடைய முப்பாட்டிக்கு முப்பாட்டி பிறந்தார். அப்பால் உள்ள அங்கே யூதாவின் பிறப்பின்போது அவள் அந்த இடத்தை அறிவித்தாள். அந்த யூதா கோத்திரத்திலிருந்தே நான் வந்திருக்கிறேன். அதற்கு அப்பால் இயற்கைக்கு மேம்பட்ட ஏதோ ஒரு காரியம் வைக்கப்பட்டிருக்கிறது. அவளே அவர்களுடைய இடங்களை கூறினாள். அங்கே யோசுவா அந்த குமாரனுக்கு அந்த இடத்தை அளித்தான்…எனவே இங்கே இந்த காரியங்கள் யாவும் அதனூடாகவே தோன்றியிருக்கின்றன. அது அவ்விதமே இருக்கவேண்டியதாயிருக்கிறது. நானோ ஒரு ஆடு மேய்ப்பவன், நீர் என்னுடைய தலையின் மேல் எண்ணெய் வார்த்தீர். நான் இராஜாவாயிருப்பேன் என்று நீர் கூறினீர். நான் உம்மை விசுவாசிக்கிறேன். ஆமென்” என்றவாறே சிந்தித்துப் பார்க்கிறேன். 110 அதன்பின்னர் அவன் திரும்பிப்போய், அங்கே கீழ் நோக்கிப் பார்த்து, “கீழே தொலைவில் உள்ள என்னுடைய சிறு பட்டணத்தில் நான் பிறந்தேன். நான் அங்கே அந்த சிறு கூட்டத்தோடு நல்ல நாட்களை கழித்தேன்” என்பதையும் இவ்வாறு சற்று நினைத்துப் பார்க்கிறான். 111 மெத்தோடிஸ்டுகள் தங்களுடைய பண்டைய நல்ல நாட்களை சற்று திரும்பிப் பார்ப்பார்களேயானால் சற்று மேலானதாக இருக்கும். அவர்கள் சொற்பமானவர்களாகவும், அருமையானவர்களாகவும் இங்கே அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்தபோது தேவனுடைய வல்லமையினால் மயங்கி விழ, அவர்களுடைய முகத்தில் தண்ணீர் தெளித்தே தெளிய வைத்தனர். பாப்டிஸ்டுகளாகிய நீங்களும்கூட எங்கிருந்து வந்தீர்கள் என்பதை சற்று திரும்பிப் பார்த்தால் நலமாயிருக்கும். மற்றவர்களும் அவ்வாறே செய்தால் நலமாயிருக்கும். பெந்தேகோஸ்தேக்களே நீங்களும் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை சற்று திரும்பிப் பாருங்கள். அது உண்மை. 112 இங்கே யுத்தத்தின் மும்முரத்தில் தாவீது இவ்வாறு சிந்தித்துப் பார்க்கத் துவங்கினான். “ஓ, அப்பாலுள்ள அந்த குன்றின்மேல் நான் படுத்திருந்த அந்த இரவுகளை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. நான் அந்த நட்சத்திரங்களை கவனித்ததையும், அவைகள் தொலைவில் எப்படி அசைகின்றன என்றும், தேவன் சிறு பையனாயிருந்த என்னுடைய இருதயத்தில் எப்படி பேசினார் என்பதையும் நான் நினைவுகூருகிறேன். நான் ஆவிக்குள்ளானபோது, ஓர்நாள் மேகங்களையும், நிழல்கொண்ட பசுமையான புல்வெளிகளையும் நோக்கிப் பார்த்து, நான் ஆவிக்குள்ளாகக் கூச்சலிட்டு, இவ்வாறு பாடினேன்; கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்.” 113 ஓ, என்னே! இதோ அவன் அப்பொழுது இரண்டு பக்கங்களிலுமிருந்து மரணத்திற்கேதுவாக நெருக்கப்பட்டிருந்தான். “ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்! ஆவியானவர் என்னோடிருந்த பண்டைய நாட்களில், தேவன் என்னோடிருந்தபோது! நான் அவருடைய துதிகளைப் பாடினேனே. நான் அவரில் களிகூர்ந்தேன். 114 “ஒரு சமயம் பெரிய சிங்கம் ஒன்று வந்து ஒருநாள் காலையில் என்னுடைய ஆடுகளில் ஒன்றை பிடித்துச் சென்றதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுது தேவ ஆவியானவர் என்மீது வந்தார். நான் அதை பின்தொடர்ந்து சென்று பற்றிப்பிடித்து துண்டு துண்டாக கிழித்துப் போட்டேன்.” அந்த விடுதலையை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஓ, அந்த மாலை சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னர் ஒரு கரடி மந்தைக்குள் வந்து ஒரு ஆட்டை பிடித்துச் சென்றபோது, நான் அதை அடித்துக் கொன்றதை நினைத்துப் பார்க்கிறேன். அவைகள் மகத்தான விடுதலையாயிற்றே! 115 “என் சிறுவயதின் நாட்களில், நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது நான் அவருடைய துதிகளைப் பாடினதை நான் நினைவுகூருகிறேன். ஓ, தேவனே, அந்த ஸ்தலத்திற்கு என்னை திரும்ப கொண்டு செல்லும். என்னுடைய ஆதி அன்பிற்கு என்னை திரும்ப கொண்டு செல்லும். என்னை திரும்ப கொண்டு சென்று என்னுடைய மேய்ப்பனின் கோலை எனக்குத் திரும்பத் தாரும். என்னுடைய ஆட்டு மந்தையை எனக்கு திரும்பத் தாரும். நான் தனிமையாய் உம்மை ஆராதிக்கும்படி அங்கே இருப்பேனாக.” 116 நாம் சில நேரங்களில் அதை நினைக்கிறோம். ஆனால் நாமோ யுத்தத்தின் மும்முரத்தில் இருக்கிறோம். ஏதோ காரியம் செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது. நாம் ஒரு காலத்தில் பையன்களாயிருந்தோம். இப்பொழுதோ நாம் புருஷர்களாக வளர்ந்திருக்கிறோம். யுத்தமோ தொடர்ந்து நடைபெறுகிறது. நான் தரையிலிருந்து புழுதி எழும்ப ஜனங்கள் கூச்சலிட்டதையும், கூக்குரலிட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன். உங்களால் அந்த இடத்தை சென்றடையவே முடியாது. எங்குமே செல்ல முடியாது. ஏனென்றால் எங்கும் அங்கு ஜனங்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு அது அந்தவிதமாக இல்லையே. யுத்தம் நடைபெறுகிறது. ஓ, அது இனிமேல் அந்த சிறு பையனாயிருந்த பிரசங்கி வில்லியம் பிரான்ஹாம் அல்ல. நீங்கள் ஏதோ ஒன்றை முன்னிலைப்படுத்த வேண்டும். ஆம், ஐயா. ஏதோ காரியம் வித்தியாசமாயிருக்க வேண்டும். அதற்கன நேரம் வந்துவிட்டது. யுத்தமோ நடைபெறுகிறது. அது தீவிரமடைந்துள்ளது. இது புத்தகத்தில் எழுதப்பட்டவர்களாய் காணப்படுகின்ற ஜனங்கள் ஒவ்வொருவரும் விடுவிக்கப்பட வேண்டிய நேரமாகும். இப்பொழுது அந்த நேரம் வந்திருக்கிறது. 117 தாவீது அவனுடைய எல்லா குழப்பங்களிலும் முன்னும்பின்னுமாக நடந்து, “ஓ, இது உஷ்ணமான நாளாயிற்றே! வ்யூ! ஓ, இது மிகவும் உஷ்ணமாயுள்ளதே! ஓ, சவுல் இந்த வழியிலிருந்து வரலாம். பெலிஸ்தியர்கள் இந்த வழியிலிருந்து வரலாம். இராணுவமோ எங்கும் சுற்றி வளைத்துள்ளது. நாமோ இங்கே கெபியின் வாயில் அமர்ந்து கொண்டுள்ளோம். ஆயினும் அதே சமயத்தில் அபிஷேகத்தைலம் என்மேல் உள்ளது. இது எப்படி இவ்வாறு இருக்க முடியும்? ஓ, தேவனே, இது எப்படி இருக்க முடியும்? ஓ, நானோ தண்ணீர் பருக வேண்டுமென்ற ஆவல் கொண்டுள்ளேன்” என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுடைய சிந்தனை அங்கேயிருந்த பெத்லகேமின் ஒலிமுக வாசலண்டை திரும்பிச் செல்கிறது. அங்கே ஒரு கிணறு இருந்தது. அங்கிருந்த தண்ணீரைப் போல வேறெங்குமே இல்லாதிருந்தது. 118 பாலஸ்தீனா கெட்ட தண்ணீரையே உடையதாயிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் கேடுவிளைவிக்கக் கூடிய தண்ணீரையே உடையவர்களாக இருந்தனர். அவர்களுக்கு அந்த தண்ணீரில் வாந்தியோடும், இரத்தம் கலந்த சிறுநீரோடும் கூடிய காய்ச்சல் போன்ற வியாதிகளும் உண்டாயிருந்தன. அது அதிக விஷத்தன்மை கொண்ட தண்ணீராய் இருந்தது. அது உங்களை கொன்றுவிடும். 119 ஆனால் பெத்லகேமோ தண்ணீர் இருப்பிடத்தின் மாகாணமாகவும்கூட இருந்தது. பெத்லகேமில் இருந்த தண்ணீரைப்போல பாலஸ்தீனாவில் இல்லை. தாவீதுவோ, “நான் காலையில் என்னுடைய ஆடுகளை ஓட்டிச் செல்கையில் நான் அந்த பழைய கிணற்றண்டை சென்று தண்ணீர் பருகுவேன். ஓ, அது எவ்வளவு குளிர்ச்சியாயும், எவ்வளவு இனிமையாயும் இருக்கும். அது எப்படியாய் தாகத்தை தணித்தது” என்று வழக்கமாக சிந்திப்பான். 120 இப்பொழுது அவனுடைய தொண்டை வறண்டு போய்க் கொண்டேயிருந்தது, அதே சமயத்தில் அவன் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். “ஓ, நான் மாத்திரம் அந்த தண்ணீரை பருக முடிந்தால் நலமாயிருக்குமே” என்று எண்ணினான். இப்பொழுது அவனுடைய போர்வீரர்கள்…அவன் தன்னுடைய நம்பிக்கையையிழந்தவனாய், “ஓ அங்கே, தூரத்தில் பெத்லகேமில் உள்ள அந்த பழைய கிணற்றிலிருந்து எவரேனும் எனக்கு தண்ணீர் கொண்டுவருவார்களேயானால் நலமாயிருக்குமே” என்று கூச்சலிட்டான். ஓ, அவனுடைய குழந்தைப் பருவ நாட்கள் மற்றும் அவன் பெற்ற வெற்றிகள் போன்றவற்றைக் குறித்த எல்லா கனவுகளுக்கும் பிறகு, அவன் இங்கே இக்கட்டான சூழ்நிலைகளுக்கிடையே அமர்ந்து கொண்டிருந்ததைக் கண்டு, “ஓ, பெத்லகேமிலிருந்து எவரேனும் எனக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வரக்கூடுமானால் நலமாயிருக்குமே!” என்று கூக்குரலிட்டான். 121 இப்பொழுது அவனுடைய போர்வீரர்களால் அவனுடைய சிந்தனைக்கு வியாக்கியானமளிக்க முடியவில்லை. ஆனால் சகோதரனே, அவர்கள் அவனுக்குள்ளிருந்த எல்லாவற்றோடும் அவனை நேசித்தனர். அவனுடைய வாஞ்சைகளில் மிகச் சிறிய ஒன்றும்கூட அவர்களுக்கு ஒரு கட்டளையாகவே இருந்தது. இப்பொழுது மூன்று பராக்கிரமசாலிகளான யுத்த வீரர்கள் தங்களுடைய பட்டயங்களை உருவிக்கொண்டு, பாளையத்திலிருந்து மெல்ல நழுவி, தங்களுடைய பாதையில் இருபத்தைந்து மைல்கள் தூரம் குறுக்கே நடந்து சென்றனர். தாவீதுவோ, அவர்கள் போயிருக்கும்போது, “அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் தங்களுடைய பிராணனை ஒரு பொருட்டாக எண்ணாதிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்களா?” என்று பிரமித்துப்போயிருப்பான் என்பதில் சந்தேகமேயில்லை. அவர்கள் தங்களை தாக்க எங்கும் மறைந்து பதிவிருக்கும் பகைவர்களின் படைகளினூடாகவே இருபத்தைந்து மைல்கள் தூரம் செல்கையில் அவர்கள் மரணத்தின் பிடியிலே இருந்தனர். பட்டயங்கள் மின்னிக் கொண்டிருந்தன. கேடயங்களோ தடதடவென ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. ஆனால் அவனுடைய மனுஷர் தங்கள் சகோதரன் ஒரு இராஜாவாய் இருப்பான் என்றும், தண்ணீர் பருக ஆவல்கொண்டான் என்பதையும் விசுவாசித்தனர். 122 ஓ, சகோதரனே, இன்றைய போர்வீரர்கள் தங்களுடைய சம்பிரதாய முறைகளிலிருந்தும், சந்தேகங்களிலிருந்தும், அவிசுவாசத்திலிருந்தும் கர்த்தருடைய பிரசன்னத்தில் புத்துணர்வு பெறும்படி அவருடைய வாஞ்சைகளினண்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்களா என்றே நான் வியப்புறுகிறேன். “உம்முடைய வாஞ்சைகளில் மிகச்சிறியதாயிருப்பது, அது ஆப்பிரிக்காவிலிருந்தாலும், இந்தியாவிலிருந்தும், அது வீதிகளினூடாக இருந்தாலும், அது எங்கேயிருந்தாலும் சரி. கர்த்தாவே, உம்முடைய வாஞ்சைகளில் மிகச் சிறியதும் கூட எனக்கு கட்டளையாகவே இருக்கிறது. மரணமானது எனக்கு ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. புகழா? என்னே! நான் என்னவாயிருக்கிறேன் என்பதும், நான் யாராயிருப்பேன் என்பதும் கர்த்தாவே, அது ஒரு பொருட்டல்லவே. ஆனால் அதினால் உம்முடைய வாஞ்சைகள் நிறைவேற்றப்படுகின்றதா என்பதே முக்கியமாகும்.” அந்தவிதமான போர்வீரர்களே அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள். “அவர்கள் என்னை ‘உருளும் பரிசுத்தர்’ என்ற அழைத்தாலும், என்னுடைய பெயர் அபகீர்த்தியாக்கப்பட்டாலும், அவர்கள் என்னை வீதியில் உதைத்துத் தள்ளினாலும் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. உம்முடைய வாஞ்சையே என்னுடைய கட்டளையாயிருக்கிறது”. அதுதான் உண்மையான போர்வீரன். 123 அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அந்த கிணற்றண்டை சென்றடையும் வரையில் தங்களுடைய வழி நெடுக சண்டையிட்டனர். அதன்பின்னரே அவ்ரகள் ஒரு வாளி தண்ணீரை மொண்டெடுத்தனர். இதோ அவர்கள் மீண்டும் தங்களுடைய வழியில் வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் சண்டையிட்டுக் கொண்டே தாவீதுவின் சமூகத்திற்குள்ளாக வரும்வரைக்கும் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தனர். அவர்கள் வந்து, “இதோ, என் ஆண்டவனே” என்றனர். ஓ, என்னே! என்ன? அவமதிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன், சபையினால் வெறுக்கப்பட்டிருந்த மனிதன், இராஜாவினால் வெறுக்கப்பட்டிருந்த ஒரு மனிதன். பெலிஸ்தியர்களால் வெறுக்கப்பட்டிருந்த ஒரு மனிதன். கிட்டத்தட்ட எல்லாரிடத்திலும் வெறுக்கப்பட்டிருந்த ஒரு மனிதன். ஆனால் ஒரு சிறு கூட்டம் அவனை பின்பற்றினது. அவன் இராஜாவாகப் போகிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 124 இன்றைக்கு நான் உங்களை அறிவேன். நாம் மகத்தான பாடல்களைப் பாடுகிறோம். நாம் மகத்தான சபைகளைக் கட்டுகிறோம். நாம் மகத்தான துதி பாடல்களையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் உடையவர்களாயிருக்கிறோம். நாம் அந்த விதமாக அவரைப் போற்றுகிறோம். ஆனால் இயேசுவானவரோ, “உங்கள் இருதயங்களோ எனக்கு தூரமாயிருக்கின்றன. ஏனென்றால் நீங்கள் மனுஷருடைய கட்டளைகளை உபதேசங்களாக போதிக்கிறீர்கள்” என்றார். பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து, சபையில் ஏதோ ஒரு காரியத்தை செய்ய அனுமதித்து இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை காண்பித்தால் அப்பொழுது அவர்கள் உங்களை வாசலுக்கு வெளியே உதைத்துத் தள்ளுவார்கள். “நீங்கள் எனக்கு வீணாய் ஆராதனை செய்கிறீர்கள். அவர்கள் ஆராதனை செய்கிறார்கள். ஆனால் மனுஷனுடைய கற்பனை உபதேசங்களாக போதித்து வீணாய் ஆராதனை செய்கிறார்கள்.” 125 ஆனால் அவரை விசுவாசிக்கிற யுத்த வீரர்கள் உண்டு. தொலைவில் இருந்த அந்த சிறு பெத்லகேமில் அதனருகில் நின்றவர்களைப் போன்று ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலோடு அருகில் நிற்கிற யுத்த வீரர்கள் உண்டு. புரிகின்றதா? நிச்சயமாகவே அவ்வாறு நின்றனர். 126 தாவீது இந்த வாளி தண்ணீரை எடுக்கிறான். அவன் அதை நோக்கிப் பார்த்தான். அவன் அதை தரையில் ஊற்றிப் போட்டான் என்று வேதம் கூறியுள்ளது. அவன், “கர்த்தாவே, நான் இதை பானம்பண்ணுவது எனக்கு தூரமாயிருப்பதாக. ஏனென்றால் இந்த என்னுடைய…உம்முடைய யுத்த வீரர்கள் தங்களுடைய பிராணனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தொலைவாகச் சென்று இந்த தண்ணீரை எனக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இது அந்த மனுஷர்களுடைய இரத்தமாயிருக்கிறது. என்னால் இதை பானம் பண்ணமுடியாது” என்றான். அவர்கள் தங்களுடைய பிராணனையும் எண்ணாமல் பகைஞனுடைய படை வரிசைகளினூடாக துணிவாக புகுந்து சென்று, கொண்டு வந்த இந்த இனிமையான தண்ணீரை கர்த்தருக்கென்று உற்சாக பலியாக தரையில் ஊற்றிப்போட்டான். அது அற்பமானதாயிருக்கவில்லை. அது வேதவாக்கியங்களின் நிறைவேறுதலாய் மாத்திரமே இருந்தது. 127 ஏனென்றால் இயேசு பெத்லகேமிலிருந்து தோன்றின ஜீவ அப்பமாயிருக்கிறபோதிலும், அவர் ஜீவ தண்ணீராயும்கூட இருக்கிறார். நிச்சயமாகவே அவர் அவ்வாறிருக்கிறார். அவர் என்ன செய்தார்? அவர் தாவீதுவிற்கும் யுத்தவீரர்களுக்கும் பிரதிநிதித்துவமாக்கப்பட்டார், ஏனென்றால் அவர் இராஜாவாயிருந்தார். அவர் யுத்த வீரனாய் வந்து பகைஞனுடைய படை வரிசைகளினூடாக துணிவாய் புகுந்தவராயிருந்தார். ஆமென். மரணத்தையும், பாதாளத்தையும், கல்லறையையும் ஜெயித்து, யோவான் 3:16-ம் வசனம் நிறைவேறும்படியாக தம்முடைய சொந்த இரத்தத்தை ஊற்றினார். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 128 அதாவது அவர் சுட்டிக்காட்டப்பட்ட அந்த தண்ணீரை அளிக்கவில்லை. ஆனால் அவரே தண்ணீயிருந்தார்; அழிந்துபோகிற ஜனங்கள் ஜீவனை கண்டடையும்படியான தண்ணீராய் இருந்தார். அவர் அதை எப்படி செய்தார்? தம்முடைய சொந்த இரத்தத்தினூடாகவே அதை ஊற்றினதின் மூலமே. அது சிந்துவதினால் அல்ல, அது ஒரு எதிர்பாராத நிகழ்வு. அவர் பகைவனின் ஒவ்வொரு படை வரிசையினூடாகவும், துணிவாய் புகுந்து சென்ற பிறகு தம்முடைய சொந்த ஜீவ இரத்தத்தை கல்வாரியில் இலவசமாய் ஊற்றினார். அவர் உலகத்தின் அப்பக்கூடையாயிருக்கும்படி ஜீவ அப்பமானார். இம்மானுவேலினுடைய இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட, இரத்தத்தால் ஊற்று நிறைந்துள்ளது, பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும்போது, தங்களுடைய எல்லா பாவக்கறைகளையும் போக்குகின்றனர். 129 அந்த காரணத்தினால்தான் அவர் பெத்லகேமில் பிறந்தார். அவர் ஜீவ அப்பமாய் இருந்தபடியால், அது அப்பத்தின் மையப்பகுதியாயிருந்த காரணத்தால் அவர் அங்கிருந்து வரவேண்டியவராயிருந்தார். அது தண்ணீரின் மையப்பகுதியாய் இருந்தது. அது என்ன? ஜீவத்தண்ணீர். எனவே இயேசுவானவர் ஜீவ அப்பமும், ஜீவத்தண்ணீருமாயிருந்தபடியால், அவர் பெத்லகேமில் பிறக்க வேண்டியதாயிருந்தது. “யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, மகத்தான பிரபுக்களில் நீ சிறியதல்லவா? நீ சாதாரண, சிறு பிரசங்கியாயிருக்கிறாய். நீ ஒரு சாதரண நபர், ஆளப்போகிறவர் உன்னிடத்தில் புறப்பட்டு வருவார்; அது அநாதி நாட்களாய் பூர்வத்தினுடையது. அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாய் பூர்வத்தினுடையது”. 130 அந்த காரணத்தினால்தான் அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். அது அவருக்கு தொட்டிலானது. என் சகோதரனே, அவர் இன்றைக்கு விரும்புகிற இடம் எதுவென்றால் உன்னுடைய சொந்த சரீரத்தில், உன்னுடைய சொந்த இருதயத்தில் தொட்டிலிடப்பட வேண்டுமென்றும், அதாவது அழிந்து கொண்டிருக்கிற ஜனங்களுக்கு உன்னிலிருந்து ஜீவத்தண்ணீராயும், பட்டினியாயிருக்கிற ஜனங்களுக்கு உன்னிலிருந்து ஜீவ அப்பமாகவும் வெளிப்படும்படிக்கு விரும்புகிறார். அவர் ஜீவ அப்பமாயும், ஜீவ தண்ணீருமாயிருக்கிறார். ஒரு மனிதனுடைய அப்பமும், தண்ணீரும் இன்றியமையாத இரண்டு காரியங்களாயிருக்கின்றன. அது நிச்சயமாகவே வாக்களிக்கப்பட்டிருக்கிறது. 131 நாம் ஒரு வினாடி அப்படியே நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. அவ்வாறு செய்கையில் உங்களுடைய முழுமையான கவனத்தை செலுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன், இந்த காலையில், நீங்கள் எப்பொழுதாவது பெத்லகேமிற்கு சென்றிருக்கிறீர்களா? நீங்கள் ஒருபோதும் பெத்லகேமிற்கு சென்றிராதவர்களாயிருந்தால்… 132 அது எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேம் என்றுகூட அழைக்கப்பட்டது. எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேம். எப்பிராத்தா என்பது “வேர்” என்றே பொருள்படுகிறது. அது ஹெ—ம்—ப் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. ஹெம்ப் என்பது “வேர்” என்றே பொருள்படுகிறது. பண்டைய பூர்வீக வட்டாரமாய் அழைக்கப்பட்ட எப்பிராத்தா என்பது “ஜீவனின் துவக்கம்” என்றே பொருள்படுகிறது. கிறிஸ்து, “நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்! நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள்” என்றார். அவரே எல்லா ஜீவன்களுக்கும் வேராயிருக்கிறார். 133 நீங்கள் ஒருபோதும் பெத்லகேமிற்கு வராதவர்களாயிருந்தால், எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமிற்கு இந்த காலையில் வாருங்கள். அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார். நீங்கள் அவரண்டை உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? அப்படியானால், “தேவனாகிய கர்த்தாவே, இப்பொழுதே என்னிடத்தில் இரக்கமாயிரும், நான் இப்பொழுதே இதோ என் முழு இருதயத்தோடு இயேசுவண்டை வருகிறேன். நான் ஜீவத்தண்ணீரும், ஜீவ அப்பமுமாகிய உம்முடைய பெத்லகேமிற்கு வருகிறேன். நான் இப்பொழுதே அவரை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறுங்கள். அங்கே பின்னாக உள்ள வாலிப நபராகிய உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் சிறுபிள்ளைகளாகிய உங்களை ஆசீர்வதிப்பாராக. 134 வேறு யராகிலும் இருக்கிறீர்களா? அப்படியிருந்தால், “நான் இப்பொழுதே வருகிறேன்; என்னுடைய கரங்களில் ஒன்றுமேயில்லை. நான் தாகமாய் நிற்கிறேன். என்னுடைய தொண்டை வறண்டுபோயிருக்கிறது. நான் எங்கே போய் உண்மையான ஜீவனை கண்டடைய முடியும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் சபைகளில் சேர்ந்திருக்கிறேன்” என்று கூறுங்கள். சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள், “நான் சபைகளில் சேர்ந்திருக்கிறேன், சகோதரன் பிரான்ஹாம், நான் செய்ய வேண்டுமென்று அறிந்த ஒவ்வொரு காரியத்தையும் நான் செய்திருக்கிறேன். ஆனால் நான் இன்னும் உண்மையான ஜீவனை அளிக்கும் வழிமுறையினை தொட்டதேயில்லை. எனவே, ‘கர்த்தாவே நான் அதை பெற்றுக் கொள்ள இப்பொழுதே வருகிறேன்’” என்று கூறுங்கள். அவர் உங்களுக்குக்காக இங்கே இருக்கிறார். நீங்கள் உங்களுடைய கரங்களை சற்று உயர்த்துவீர்களா? நீங்கள், “இது எனக்கு கர்த்தாவே. தேவையுள்ளவனாக நின்று கொண்டிருக்கிற ஒருவன் நான்தான்” என்று கூறுங்கள். நாம் ஜெபிக்கையில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 135 ஓ, தேவனாகிய கர்த்தாவே, இந்த சிறிய கோர்வையற்ற செய்தியானது வேத வாக்கியங்களிலிருந்தே கொண்டு வரப்பட்டது. நீர் அங்கே அதினுடைய எல்லா அடையாளங்களையும் வைத்திருந்தபோதிலும், “அது ஞானிகளுடைய கண்களுக்கும், கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, கற்றுக் கொள்ளக்கூடிய பாலகர்களுக்கு அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது”. எப்படியாய் அந்த சிறிய பெத்லகேம், அவைகள் எல்லாவற்றிலும் சிறியதாயிருக்கிறதே! எப்படியாய் அந்த தீர்க்கதரிசி அதை கூறினான்? “நீ ஆயிரங்களுக்குள் சிறியதல்லவா?” ஆனாலும் இஸ்ரவேலின் அதிபதியை அந்த அற்பமான ஸ்தலத்திலிருந்து கொண்டுவருவது தேவனுக்கு மிகவும் பிரியமாயிருந்தது. தேவனாகிய கர்த்தாவே, கர்த்தராகிய இயேசுவின் செந்நிற இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிற ஒரு சிறு கூட்ட ஜனத்திலிருந்து, எங்கோ உள்ள அந்த கூட்டத்திலிருந்து, கர்த்தாவே, எல்லா தேசங்களையும் ஒரு இரும்புக் கோலினால் அரசாளும்படிக்கு மீண்டும் கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு நீர் கொண்டு வருவீர். 136 பிதாவாகிய தேவனே, நீர் இப்பொழுது இங்குள்ள எங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். நாங்கள் உம்முடைய பெத்லகேமிற்கு வருவோமாக. நாங்கள், “விசுவாசமுள்ள நீங்கள் எல்லோரும் வாருங்கள், பெத்லகேமுக்கு வாருங்கள்” என்று பாடிக் கொண்டே வருவோமாக. கர்த்தாவே ஒரு காலத்தில் ஒரு அடையாளமாக தூரத்தில் இருந்த அந்த சிறிய பட்டணத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுவார்களாக. ஆனால் உண்மையண்டைக்கு, தேவனுடைய அப்பமும், ஜீவத்தண்ணீருமான இயேசு கிறிஸ்துவண்டைக்கு செல்வார்களாக. 137 கர்த்தாவே, தங்களுடைய கரங்களை உயர்த்துகிறவர்களை இப்பொழுதே உம்முடைய இராஜ்யத்திற்குள் அவர்களை ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால் இதுவோ அவர்கள் தங்களுடைய விசுவாசத்தினாலேயே அவரை ஏற்றுக்கொள்கிறதாயிருக்கிறது. இதுவோ அவர்கள் தங்களுடைய விசுவாசத்தினால் கரங்களை உயர்த்துகிறதாயிருக்கிறது. நீர் அவர்களை ஏற்றுக்கொள்கிறீர் என்று விசுவாசத்தின் மூலம் நான் நம்புகிறேன். கர்த்தாவே, அவர்களை பெத்லகேமில் காத்துக்கொள்ளும், அவர்கள் அங்கிருந்து ஒருபோதும் அலைந்து திரியவோ அல்லது நகோமியைப்போல தூரமாய் செல்லாதபடிக்கு காத்துக்கொள்ளும். ஆனால் ஒருக்கால் கடினமான நேரங்கள் ஏற்படுமாயின் அப்பொழுதும் அவர்கள் பெத்லகேமிலே தரித்திருப்பார்களாக. அது மேலான எதிர்காலமாய் இருப்பதாக. கர்த்தாவே இதை அருளும். 138 இப்பொழுது சுகவீனமாயும், துயரப்பட்டுமிருக்கிறவர்களுக்கு நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவர்களுக்கு தேவையாயிருக்கிற உம்முடைய சுகமளித்தலின் தொடுதலுக்காகவே இங்கே இருக்கிறார்கள். ஓ, கர்த்தாவே, நீர் பெத்லகேமில் அவளுக்கிருந்த எல்லா மகிமைகளையும் திரும்ப அளித்தீர். அவள் சுகவீனமாயிருந்தபோது, சோர்ந்து போயிருந்த நேரத்தில் நீர் அவளுக்கு திரும்ப அளித்தீர். நீர் அவளை திரும்பவும் கொண்டுவந்தீர், நகோமியை வாற்கோதுமை காலத்திலே திரும்ப கொண்டு வந்தீர் இப்பொழுதும் பிதாவே நீர் ஒவ்வொரு நகோமியையும், தேவையுள்ளவர்களாய் இங்கிருக்கிற ஒவ்வொருவரையும் திரும்ப கொண்டுவர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். தேவனே நான் ஜெபிக்கிறேன். ஓ, கர்த்தாவே, இது வாற்கோதுமை காலமாயிருக்கிறது. மகத்தானதாய் காணபட்ட அந்த வாற்கோதுமை அப்பம் மலையிலிருந்து உருண்டு வந்து பகைஞனின் பாளையத்திற்கு சென்றதே. தேவனே, நீர் அந்த மகத்தான வாற்கோதுமை அப்பத்தை இப்பொழுதே இந்த கட்டிடத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இது பாவத்திற்கான பாவநிவிர்த்தியாயும் இருக்கிறதுபோலவே ஜனங்களின் சுகவீனத்திற்கான பாவநிவிர்த்தியாயும் இருப்பதாக. தெய்வீக பிரசன்னத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். 139 கர்த்தாவே, நான் சற்று உணருகிறேன், ஒருக்கால் இது என்னுடைய சொந்த தனிப்பட்ட உணர்வாயிருக்கலாம். ஆனால் நீர் அருகில் இருக்கிறீர் என்பதையும் இங்கே உள்ள உம்முடைய நெருக்கமான பிரசன்னத்தை நான் உணருகிறேன். நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜனங்களின் நிமித்தமாக நான் இதை கூறவில்லை. நீர் மனிதனின் இருதயத்தை அறிந்திருக்கிறீரே. கர்த்தாவே எப்படியாவது அவர்கள் அந்த போர்வீரர்களைப் போல இந்த காலையில் அந்த தரிசனத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அது உம்முடைய மகத்தான சர்வ வல்லமையாயும், உம்முடைய மகத்தான வல்லமையாயும், உம்முடைய மகத்தான பிரசன்னமாயுமுள்ளது. நீர் தேவகுமாரனாய், இராஜாவாய், அபிஷேகம் பண்ணப்பட்டவராய், எங்கள் மத்தியில் இருக்கிறவராய் இருக்கிறீரே! அவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களில் அதினுடைய கணநேர காட்சியைக் கண்டு, தங்களுடைய துயரங்களிலிருந்து சுகமடைவார்களாக. நான் இதை அவர்களுக்கென்று ஏறெடுக்கையில் இதை உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 140 நான் தேவனையும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் விசுவாசிக்கிறேன். அவருடைய வார்த்தையின் ஒவ்வொரு பாகமும் தெய்வீக ஆவியினால் ஏவப்பட்டதாய் இருக்கிறது என்றே விசுவாசிக்கிறேன். நான் அவரை, “நான் இருந்தேன்” என்பவராய் அல்ல, ஆனால் அவரை, “நான் இருக்கிறேன்” என்பவராக, என்றென்றைக்கும் ஜீவிக்கிற பிரசன்னமுள்ளவராகவே விசுவாசிக்கிறேன். இப்பொழுது இங்கே ஜனங்களுக்கு மத்தியில் அவர் இருக்கிறார் என்றே நான் விசுவாசிக்கிறேன். 141 உங்களுடைய கரத்தை உயர்த்தின நீங்கள் ஒரு சபையைக் கண்டறியுங்கள். “தேவனை தொழுதுகொண்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, உங்களுடைய பாவங்கள் போகக் கழுவப்பட்டு,” அவருடைய வருகையும்கூட சமீபமாயிருக்கிறது என்று விசுவாசியுங்கள். அவர் தம்முடைய இரண்டாம் வருகையில் பிரசன்னமாக வேண்டியவராயிருக்கிறார். 142 சுகவீனமுள்ளவரை சொஸ்தப்படுத்தவும், வியாதியஸ்தரை சுகப்படுத்தும்படியாகவுமே அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது என்று நானும்கூட விசுவாசிக்கிறேன். ஜெபிக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை. நான் அன்றொரு இரவு ஜனங்களுக்கு அதை நிரூபித்தேன். அதாவது என்ன சம்பவித்திருந்தது என்பதை அவர்களுக்கு காண்பிக்க விரும்பினேன். 143 அநேக நாட்களாக படுக்கையில் இருந்த ஒரு குறிப்பிட்ட வாலிப மனிதன் உட்கார்ந்து என்னையே அப்பொழுது நோக்கி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எதையுமே சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு அவனுடைய தொண்டை மிகவும் மோசமாக வீங்கியிருந்தது. அவனுக்கு காய்ச்சல் உச்சகட்டத்தில் இருந்தது. எனவே அவன் தன்னுடைய தந்தையிடமும், தாயிடமும், “எனக்காக ஜெபிக்கவரும்படி சகோதரன் பிரான்ஹாமை அழைத்து வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்திருந்தான். எப்படியிருந்தபோதிலும் அவர்கள் என்னை தொல்லைப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் நான் ஊழியத்தில் மிகவும் அலுவலாய் இருந்தேன். ஆனால் ஏதோ ஒன்று என்னை அவர்களுடைய வீட்டிற்குப் போகும்படி வழிநடத்தியது. 144 அங்கே அமர்ந்திருக்கையில், அவர்கள் அந்த வாலிபனுக்கு ஒரு தட்டில் உண்மையாகவே குழைவாயிருந்த முட்டையையும், மற்ற ஏதோ ஒன்றையும், குழைந்துபோன மொச்சைப் பயிற்றையும் புசிக்கக் கொடுக்கும்படி முயற்சித்தனர். அவனோ அதை விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் அவைகளை வாய்க்குள்ளேயே உழலச்செய்து, ஒரு விரலைக் கொண்டு அவைகளை இன்னும் நசுங்கும்படி செய்தான். அவனுடைய பற்களின் ஈறுகள் வீங்கிப்போய், அவைகளிலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது. அவன் அந்த ஆகாரத்தை இந்தவிதமாக தன்னுடைய விரலினால் நசுக்கி, தன்னுடைய தொண்டைக்குள் விழுங்க முயற்சித்தான். அவன் கிட்டத்தட்ட அந்த ஆகாரத்தை ஒரு முறை அல்லது இரண்டு முறை கடித்துப் பார்த்தான். அவனால் அதற்குமேல் மெல்ல முடியவில்லை. எனவே அவை வெளியே வந்தன. 145 நானோ அங்கே ஜெபிக்காமல் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே ஏதோ ஒரு சிறு காரியம் இருந்தது. ஆனால் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் எல்லோருக்கும் கூறமுடியாது. முடியாதே. நான், “கர்த்தாவே, கர்த்தாவே, இப்பொழுது இதுவோ வருடத்தின் முடிவை நெருங்குகிறதாயிருக்கிறது. புதியதான ஏதோ ஒரு காரியம் வந்து கொண்டிருக்கிறது. கர்த்தாவே புதியதான ஒன்றை என்னை காணச்செய்யும். அது இதுதானா? அது இதுவோ?” என்று கேட்டேன். நான் அதை கூறத்துவங்கினவுடனே, அப்பொழுது என் இருதயத்தில், “நீர் இங்கு இருக்கிறீர் என்பதை நான் அறிவேன்” என்று கூறினவுடனே, அந்த வாலிபன் அந்த ஆகாரத்தை எடுத்து மீண்டும் கடித்து, மற்றொரு கடி கடித்து, மற்றொரு கடி கடித்து, மீண்டு கடித்து மென்று தன்னுடைய தட்டில் இருந்த முழு ஆகாரத்தையுமே காலி செய்துவிட்டு, தன்னுடைய வாகனத்தில் ஏறிப் போய்விட்டான். 146 ஓ, அவர் தேவனாயிருக்கிறார். பாருங்கள், அவருடைய பிரசன்னம், அவருடைய பிரசன்னம், அது…அதுவே அவரை இங்கே இருக்கும்படி அனுமதிக்கிறது. 147 அன்றொரு நாள் அவர்கள் கடைசியாக, சமீபத்தில் ஒரு புகைப்படமெடுத்தனர். நான் அங்கே அவர் நிற்கிறதைக் கண்டபோது, நான் அதை நோக்கிப் பார்த்தேன். அப்பொழுது நான், “நான் அதில் கர்த்தருடைய தூதனை கண்டிருக்கிறேன். அது அற்புதமானதாயிருந்ததை நான் அறிந்துள்ளேன்” என்று எண்ணினேன். ஆனால் அவர்கள் இந்த ஒன்றை எடுத்தபோது, அப்பொழுது சுமார் காலை மூன்று மணியளவில் அவர் என்னை எழுப்பி, என்ன இருக்கப்போகிறது என்றும், அவை எல்லாவற்றையும் எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதாவது போர்க்கருவிகள் எப்படியிருக்கும் என்றும், இன்னும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும், நான் இதுவரை அதின்பேரில் கண்டிராத காரியங்களையும் எனக்கு காண்பித்தார். நான் அதை பார்க்க சென்றபோது, அதை பார்த்தேன். அது அவ்வாறே இருந்தது. நான் அதை அதற்கு முன் பார்த்திருந்ததேயில்லை. ஓ, அவர் இங்கிருக்கிறார் என்பதை அறிய அது என்னே ஒரு உணர்வையும் ஒரு ஆறுதலையும் எனக்கு கொண்டு வந்தது. 148 அவர் இங்கு இருக்கிறார், அவருடைய பிரசன்னம். வியாதியுள்ளோரை சுகப்படுத்த அங்கே கர்த்தரின் பிரசன்னமிருந்தது. வியாதியஸ்தரை சுகப்படுத்த இங்கேயும் கர்த்தருடைய பிரசன்னம் இருக்கிறது. பாவிகளுக்கு திட நம்பிக்கையைக் கொண்டுவரும்படியாக இங்கே கர்த்தருடைய பிரசன்னம் உள்ளது. அவருடைய ஜனங்களுக்கு மத்தியிலே கர்த்தருடைய பிரசன்னம் உள்ளது. அவர் தேவனுடைய பெத்லகேமில் முழுமையான அப்பமாயும், தண்ணீருமாயிருக்கிறார். நாம் வந்து புசித்து என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படியான ஒரு இடம் உண்டு என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா?) 149 இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே நீர் கூறவேண்டிய ஏதேனும் ஒரு காரியம் உண்டா? [சகோதரன் நெவில், “இல்லை” என்கிறார்.—ஆசி.] நாம் அப்படியே ஒரு வினாடி எழும்பி நிற்போம். முடிவாக கலந்து செல்கையில் நாம் பாடும் பழைய பாடல், “இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்” என்பதாகும். 150 எத்தனைபேர் கர்த்தரை நேசிக்கிறீர்கள்? நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துகிறதை நாங்கள் காண்போமாக. இப்பொழுது, நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தினீர்கள். இப்பொழுது அவைகளை கீழே இறக்கிவிட்டு, உங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிற யாருடனாவது கரங்களை குலுக்குங்கள். அதாவது, “யாத்திரிகனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுங்கள். அது உண்மையே, அப்படியானால் சுற்றிலும் அவ்வாறு கூறுங்கள். சரி, நீங்கள் அந்தவிதமாகவே ஒருவரோடு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். சரி. 151 இப்பொழுது நாம் பரலோகத்தை நோக்கிப் பார்த்தவாறு இந்த பாடலை பாடுவோமாக. துன்பமும் துயரமுமான பிள்ளையே, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டுசெல்; அது உனக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அளிக்கும், நீ எங்கெல்லாம் செல்கிறாயோ, அங்கெல்லாம் அதை கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமையானது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமையானது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாமே. இப்பொழுது நினைவிருக்கட்டும்…